பக்கம்:பரிசு மழை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ல் டாக்டர் ரா. சீனிவாசன் 62. விளக்கம் நேற்றுப் பார்த்தது இன்று இல்லை. அப்படி என்றால் தத்துவம் பேசுவதாக நினைப்பீர்கள். தத்துவமாவது மண்ணாங்கட்டியாவது. இன்று அப்படித்தான் பலபேர் பேசி வருகிறார்கள். "எப்படித்தான் பணம் இப்படிச் சேர்கிறதோ என்கிறார்கள்." இன்று அலாவுதீனும் அற்புத விளக்கும் பழைய கதையாகி விட்டது. ஆயிரம் என்று பேசியவர்கள். இன்று லட்சம் என்று பேசுகிறார்கள். கோடிக்கு எட்டி விட்டார்கள். எல்லாம் கன அடி அளவில் பேசப்படுகிறது. இதற்கு முன்னால் அந்தப் பெண்ணைப் பார்த்த போது அவள் அந்தக் காலத்து இலக்கிய வருணனையாக இருந்தாள். அன்று ஒடிவது போலும் இடை இருந்தது. எல்லாம் அளவோடு இருந்து பார்ப்பதற்குக் காட்சியாக இருந்தாள். லட்சணமாக இருக்கிறாள் என்று அவளைப் பற்றிய அட்சரம் பேசப்பட்டது. அவள் எப்பொழுதும் தனித்துச் செல்வது இல்லை. யாராவது துணையோடுதான் போவாள்; எல்லாம் அவள் வயது பெண்கள்தாம். சீட்டியும் மாட்டியும் அவள் சீமாட்டி அல்ல என்பதைக் காட்டின. முத்து வடம் ஒன்று அவள் கழுத்தில் தொத்திக் கொண்டு இருந்தது. வளையல்கள் கைக்கு ஒன்று இடப்பட்டு இருந்தன. மின்னவில்லை. அதனால் பொன் அல்ல.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/136&oldid=806816" இலிருந்து மீள்விக்கப்பட்டது