பக்கம்:பரிசு மழை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 15 கொள்வார்; ஏழாவது பெண் பிறந்தால் அதிர்ஷ்டமளிக்கும் என்று கூறுவார்கள்; எட்டாவது பிறக்காமல் அவர்கள் குடும்பக்கட்டுப்பாடு செய்து கொண்டார்கள் என்று கேள்வி. அந்தக் குடும்பத்தின் ஏழ்மைக்கு அவள் ஏழாவது துணையாகியது. வறுமைக்குக் குழந்தைகளே காரணம் என்று கூற முடியாது. ஆறுபேர் சாப்பிடுவது ஏழாவதுக்குப் பங்கிட்டுத் தரப்படுகிறது; அவ்வளவுதான்; அதற்குள் முதலாவது முன்னுக்கு வந்து விடுவதால் இந்த ஏழாவது சுமையாகப் படவில்லை; என்றாலும் ஏழும் பெற்ற பிறகு தான் அளவான குடும்பம் வளமான வாழ்வுக்கு வழிவகுக்கும் என்ற நம்பிக்கை தோன்றியது. இந்தப் பெண்ணுக்குக் குழந்தை பெற்றுக் கொள்வதைவிட பாவமான செயல் வேறு ஒன்று இருக்க முடியாது என்ற ஆழமான கருத்துப் பதிவு ஆகிவிட்டது. இவளைக் கட்டிக் கொடுக்க வீட்டில் பொன்கட்டி இல்லை; என்றாலும் வட்டிக்கு வாங்கிக் கடைத் தேறி வைக்க முடிந்தது. பணம் இல்லை என்பதால் மணம் இல்லை என்று யாரும் தள்ளிப் போடுவது இல்லை. இந்தக் கூட்டுமணம் இலவச மணங்கள் அந்தக் காலத்தில் இருந்திருந்தால் அவர்கள் பயன்படுத்தி இருப்பார்கள்; வந்தவன் நொந்து போன குடும்பத்துக்கு எந்தத் தொல்லையும் தரவில்லை; பார்த்தான்; அவனுக்குப் பிடித்து விட்டது. கட்டிய சேலையோடு வந்தால்போதும் என்றான்; அவள் மாற்றுச் சேலைகளோடுதான் அவனோடு சென்றாள். பழைய ஒரு வீடு; அது பழையது; அதனால் குடிக்கூலி குறைவு. பழைய வீட்டில் இவர்கள் புதுக்குடித்தனம் சென்றார்கள். வீடு குடிக்கூலி விடுகிறவர்களுக்கு ஜனத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/17&oldid=806827" இலிருந்து மீள்விக்கப்பட்டது