பக்கம்:பரிசு மழை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 டாக்டர் ரா. சீனிவாசன் தொகைக் கணக்கு அந்த வகையில் இவர்கள் சாதகமாக இருந்தனர். அதிக எண்ணிக்கை இருந்தால் அதற்காக வருகிறவர்கள் கூடுதல் தொகை ஏதும் தரப்போவது இல்லை. குறைவாக இருந்தால் கூச்சல் மிச்சம், தண்ணீர் அது முக்கியமான பிரச்சனை. சிலசமயம் கியூவில் நிற்க வேண்டி இருக்கும்; அது வேதனையான விஷயம். எல்லாருக்கும் சேர்த்து ஒரே பொது குளியல் அறை, பொது என்றால் ஒருவர் முடித்த பிறகுதான் அடுத்தவருக்கு அங்கு இடம். வீட்டைப் படைத்தவர்களுக்கு இவர்களை மிகவும் பிடித்துவிட்டது. மாதம் குடிக்கூலி ஒழுங்காக வரும்; அவனுக்கு நிரந்தரமான வேலை; புதுமணம் செய்து கொண்டவர்கள்; வெளியே அதிகம் தலைகாட்ட மாட்டார்கள். பிறர் ஜோலிக்கு வரமாட்டார்கள். தனியாக இருக்கும் போது கூடமாட அவள் வந்து உதவி செய்வாள்; பார்த்தால் நல்ல பெண்ணாகவும் இருந்தாள். அந்த வீட்டுக்கு உரியவர்களுக்கு அவர்களை மிகவும் பிடித்து இருந்தது; அவர்கள் இருப்பது தெரிவது இல்லை; அவன் வருவது போவது தெரியவில்லை; இப்படி அவர்களைப்பற்றிய நற்சான்று இதழ்கள். ஆண்டுகள் ஐந்து கழிந்தன; என்றாலும் அவர்களை அதிகம் கூட்டிக் கொடுக்கச் சொல்ல முடியவில்லை; புதிய வசதிகளை வீட்டார் ஏதும் செய்து தரவில்லை; மேலும் அது பழைய வீடு, குழந்தைகள் இல்லாத வீடு, வீட்டை அவர்கள் சுத்தமாக வைத்துக் கொண்டிருந்தார்கள்; அடிக்கடி சுண்ணாம்பு அடிக்கும் வேலையும் இல்லை. ஆற்றொழுக்காக அவர்கள் அங்கு வாழ்க்கை அமைந்திருந்தது; அவர்கள் குழந்தை பெறாமலேயே இருந்தார்கள்; அது அவர்கள் சொந்தப் பிரச்சனை, அதனால் அவர்கள் வருத்தம் தெரிவித்ததாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/18&oldid=806830" இலிருந்து மீள்விக்கப்பட்டது