பக்கம்:பரிசு மழை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 8 17 தெரியவில்ல்ை ஆனால் மற்றவர்களுக்கு விமரிசனங்கள் செய்யாமல் இருக்க முடியவில்லை; அதிகம் பெற்றவர்கள் அவர்களைக் கண்டு பொறாமைப் பட்டுப் பேசினார்கள்; கிழடுகள் சிலர் அவளை மலடி என்றும் கேட்டும் கேளாமலும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் கையாளும் தடுப்புச் சாதனங்கள் என்ன என்று கேட்டு அறிய ஆவல் கொண்டவர்களும் உண்டு; தவறு செய்யும் கன்னிப் பெண்கள் சிலர் எப்படி அவர்கள் தப்பித்துக் கொண்டு வருகின்றனர் என்று கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆர்வம் கொண்டிருந்தனர்; ஆனால் அவர்கள் எப்படிக் கேட்க முடியும்? "உனக்கு ஏன் அதற்கு ?” என்று திருப்பிக் கேட்டு விட்டால் பதில் சொல்ல முடியாது. கன்னிப் பெண் என்றால் அவள் தவறுகளே செய்ய மாட்டாள்; அவர்களுக்கு அந்த உரிமை கிடையாது எதையும் தெரிந்து கொள்ள. இந்த வகையில் அந்த வீடு தனித்துவம் கொண்டதாக விளங்கியது. குழந்தை இல்லை என்றால் மற்றொரு கெடுதலும் உடன் சேர்கிறது. எப்பொழுதும் வீட்டை அவர்கள் சுத்தமாக வைத்துக் கொள்கிறார்கள். ஒரு சிறு குப்பை விழுந்தாலும் அவர்களால் தாங்கிக் கொள்ள முடிவது இல்லை. அஞ்சலி படத்தில் வருவதுபோலக் குழந்தைகளை அவர்கள் சேர்ப்பது இல்லை சுவரில் கிறுக்கி விடுவார்கள் என்ற அச்சம்; அதைவிட அங்குவந்து கூட்டல் கழித்தல் கணக்குப் போட்டுவிடுவார்கள். இவள் பலபேருடன் பிறந்தவள்தான்; மற்றவர்கள் இவளுக்குச் சேவை செய்து இருக்கிறாள்; இவள் செய்து பழக்கம் இல்லை. இவர்கள் இருமையைப் பெருமையாகப் பேசிக் கொண்டிருந்த வீட்டுக்கார அம்மாவுக்கே ஒரு பிரச்சனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/19&oldid=806832" இலிருந்து மீள்விக்கப்பட்டது