பக்கம்:பரிசு மழை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 டாக்டர் ரா. சீனிவாசன் உதயம் ஆகியது. அவர்கள் பேர்த்தி அந்த வீடு மிகவும் சுத்தமாக இருந்ததால் ஒதுங்குவதற்கு அந்த வீட்டைத் தேர்ந்து எடுத்தாள். அது சுகாதார வசதியைத் தேடி இருக்கிறது; அவ்வளவுதான். அதை அகற்றுவதற்கு வீட்டுப் பெரிய அம்மாவை வந்து கூப்பிட நேர்ந்தது. "ஏன்'டி அம்மா! நீதான் எடுத்துப் போடக் கூடாதா? நீ குழந்தை பெறாதவள்; உனக்கு இந்த அருமை எங்கே தெரியப் போகிறது? என் பேர்த்தியைக் கடிந்து கொண்டாயாமே?” "ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் இருக்கிறது; இது அதற்கு ஏற்ற இடம் இல்லை; அதற்கு உரிய இடம் உள்ளது" என்று சுட்டிக் காட்டினாள். "இதற்குத்தான் குழந்தை இல்லாத குடும்பத்தை வைக்கக் கூடாது" என்று மாற்றிப் பேசினார். "இது ஒரு வீடா; லாட்ஜ் மாதிரி இருக்கிறது; குழந்தைகள் வர போக இருந்தால்தானே அது வீடு; பெரிய தவறு செய்து விட்டேன்' என்று வியாக்யானம் செய்தார்கள். "வரும்போது குழந்தை இல்லை; அதனால் வீட்டை விடுகிறேன். என்று கூறினர். இப்பொழுது உங்களுக்காக நாங்கள் பெற்றுக் கொள்ள வேண்டும் போல இருக்கிறது. வரட்டும் அவரிடம் சொல்கிறேன்” என்று ரோஷமாகக் கூறினாள். அங்கே ஒரு பூகம்பம் ஏற்படவில்லை. சிறு அதிர்ச்சிதான்; அதை அவள் பூகம்பமாக எடுத்துக் கொண்டாள் என்று தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/20&oldid=806835" இலிருந்து மீள்விக்கப்பட்டது