பக்கம்:பரிசு மழை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 8 19 அவன் வீடு வந்து சேர்ந்தான்; அவன் உட்காரவும் அவள் பொறுத்து இருக்கவில்லை. "எனக்குக் குழந்தை வேண்டும்" என்றாள். "என்னை இப்பொழுது என்ன செய்யச் சொல்கிறாய்; பெற்றுக் கொள்ளலாம்; பொறு; அது நம்மால் முடியும்" என்று அமைதியாகப் பேசினான். "இதுவரை தேவை இல்லை என்றுதான் நினைத்தேன். அது அவசியம் என்பதை உணர்கிறேன் அந்த வீட்டுக்கார அம்மா சொன்னதற்காக வருத்தப்படவில்லை. அவர்கள் மற்றவர்கள் நினைப்பதைத்தான் சொல்லி இருக்கிறார்கள்; குழந்தை இல்லை என்பதால் நமக்கு இங்கு இடம் தந்தார்கள்; அதே காரணத்துக்காக நம்மைக் கடிந்து பேசி விட்டார்கள்; அக்கம் பக்கத்தவர் அவர்கள் நம்மை மதிக்க மாட்டேன் என்கிறார்கள். நாம் இதுவரை நமக்காக வாழ்ந்தோம்; இனிமேல் இந்த நாலுபேருக்காக வாழ வேண்டி இருக்கிறது. அதற்காக நாம் மாறத்தான் வேண்டும்” என்று எழுந்த சீற்றத்தை ஆற்றுப்படுத்தினாள். அடுத்து சில மணி நேரங்களில் ஐந்து குழந்தைகளைக் கொண்டுவந்து நிறுத்தினான். 'ஒரு குழந்தை போதும்" என்றாள். "பெற்றால்தான் அவர்கள் பிள்ளைகள் என்பது இல்லை; வளர்த்தாலும் பிள்ளைகள்தான்." 'குழந்தை பெறாதபோது உன்னால் மற்ற குழந்தைகளிடம் அன்பு காட்ட முடியவில்லை; எல்லாக் குழந்தைகளும் நம் குழந்தைகளே என்ற மனோபாவம் , வளரவில்லை; வளர்த்துக் கொள்ளவில்லை. அதற்கு இது தண்டனை' என்றான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/21&oldid=806837" இலிருந்து மீள்விக்கப்பட்டது