பக்கம்:பரிசு மழை.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 டாக்டர் ரா. சீனிவாசன் அவன் சொல்வது சரியா? அந்தக் குடும்பத்துக்கு ஒரு குழந்தை தேவை என்ற முடிவு சரிதானா? அவள் கொண்ட சீற்றம் நியாயந்தானா இந்த வினாக்களுக்கு விடை காண முயல்வோமாக. 5. குறை எங்கே உள்ளது? அமெரிக்கா குடியேறிய நாடு. அங்கு வாழும் இந்தியர்கள் சங்கங்கள் அமைத்துக் கொண்டு தங்கள் கலாச்சாரங்களைக் காத்து வருகின்றனர். பழமையில் இருந்து விடுபட்டுப் புதுமையில் கால் வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். மண் புதிது; என்றாலும் அவர்கள் பிறந்த தேசம் அதன் பெருமையை அவர்கள் மறக்காமல் இருக்க இந்தச் சங்கங்கள் உதவுகின்றன. ஒவ்வொரு மொழி பேசும் இந்தியர்கள் அவர்கள் பழைய மொழியை மறப்பது இல்லை; தமிழர்கள் தமிழ்ச் சங்கங்கள் வைத்து இருக்கின்றனர். தெலுங்கர்கள் மற்றைய மொழி பேசுவோர் இந்தியக் கலைச் சங்கங்கள் என்று சங்கங்கள் வைத்துக் கலாச்சாரக் குழுவுகளுக்கு அழைப்பு அனுப்புகின்றனர். தமிழ்ச் சங்கத்திலிருந்து திரைப்படக் குழுவுக்கு அழைப்பு ஒன்று வந்தது. அதைச் சற்று விரிவு படுத்தி அரசியல் தலைவர் ஒருவருக்கு அழைப்பு அனுப்பி இருந்தனர். அங்கு அவர்கள் செல்வச் செழிப்பைக் கண்டனா: அங்கே திறமைசாலிகள் மதிக்கப் படுகின்றனர்; திறமை எங்கு இருந்தாலும் அதை ஏற்று அழைப்புத் தருகின்றனர். அறிவுத் துறையில் இன்று உலகத்தின் முன்னோடியாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/22&oldid=806839" இலிருந்து மீள்விக்கப்பட்டது