பக்கம்:பரிசு மழை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 8 21 விளங்குகிறது. அங்கே வறுமைக் கோடு என்பது எங்கும் கிழித்து வைக்கப்படவில்லை. கண்ணியமான வாழ்க்கையை அங்குக் காணமுடிந்தது. தேவைகளைப் பெருக்கிக் கொள்வதும் அவற்றை நிறைவேற்றுவதும் அவர்கள் போக்காக இருந்தது. உன்னத நிலையில் இருந்த தன்னந் தனிச் செல்வர் ஒருவரைக் காண முடிந்தது; அரசியல் தலைவர், அவர் வீட்டு விருந்தினராக அழைக்கப் பட்டார். உண்ட பிறகு உறவாடும் கட்டம் வந்தது. என்ன பேசுவது என்று அவர்க்கு எண்ணம் உதயமாகவில்லை. “உங்களைப் போன்ற படித்த அறிவாளிகள் நம் நாட்டுக்குச் சேவை செய்யாமல் இங்குவந்து இந்த நாட்டைச் செழிக்க உதவுகிறீர்; நாட்டுப் பற்றும் தேவை; இது வருந்தத் தக்கது" என்று ஒரு சில வார்த்தைகளை உதிர்த்தார். "நாங்கள் இன்று இந்த உன்னத நிலைக்குவந்ததற்கு நம் நாட்டுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம். எங்கள் இழப்பு உங்களுக்குப் பெரிது அல்ல; இன்றும் புதிய தலை முறை தோன்றி வளர்கிறது; அவர்கள் எந்த அளவிலும் அறிவு குறைந்தவர்கள் இல்லை; அவர்களை வெளியேறச் செய்யாமல் காப்பாற்றுங்கள்” என்றார். "உங்களை மட்டும் யார் வெளியேற்றியது? நீங்கள் அவசரப்பட்டு வந்துவிட்டீர்கள்” என்றார். "அதற்காக வருத்தப்படவில்லை; எங்களுக்கு நன்மை தான் செய்தார்கள்; எங்களை அங்கு ஏற்று வாய்ப்பு அளித்திருந்தால் நாங்கள் நம் நாட்டுக்குப் பணி செய்யும் வாய்ப்பைப் பெற்று இருப்போம். நாங்கள் உயர வேண்டும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/23&oldid=806841" இலிருந்து மீள்விக்கப்பட்டது