பக்கம்:பரிசு மழை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 0 டாக்டர் ரா. சீனிவாசன் என்ற நல்லெண்ணத்தால் எங்களை அவர்கள் மறுத்து விட்டார்கள்” என்றார். "விளங்கும்படி கூற முடியுமா?" "நம் நாட்டு அரசியல் சூழ்நிலை சாதிகள் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று ஆகிவிட்டது. அதை எதிர்க்க முடியாது, அது நம் நாட்டுச் சூழ்நிலை." "நீங்கள் பிற்பட்ட வகுப்புதானே? உங்களுக்கு உரிமை மறுக்கப்பட்டு இருக்காதே" "இங்கு இதைப்பற்றிப் பேசாமல் இருப்பது நல்லது: நாட்டுப்பற்று நம் குறைகளை எடுத்துப் பேசுவதைத் தடுக்கிறது; குறைகள் இருக்கின்றன; அவற்றை நீக்கப்பாடு படவேண்டும்" என்றார் அவர். அந்தக்குறைகள் யாவை? அரசியல் வாதியைச் சிந்திக்க வைத்தன. 6. அவனுடைய தேவை தன் மகனின் தேவை மூன்று சக்கர உருளை, அது அவனுக்குத் தேவைப்பட்டது. எதிர் வீட்டுப் பையன் இந்தத் தூண்டுதலுக்குக் காரணமாக அமைந்ததுதான் புதிய வண்டி, சிறுதேர் உருட்டியது பழைய கதை. நடைவண்டி அதன்பின் நின்று தள்ளுவான்; தொய்வு இல்லாமல் நடக்க அது உதவியது. நடப்பதை விட சைக்கிள் கற்றுக் கொள்வது அவனுக்கு அவசியம் எனப்பட்டது. அழுதான்; வாங்கிக் கொடுத்து விட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/24&oldid=806843" இலிருந்து மீள்விக்கப்பட்டது