பக்கம்:பரிசு மழை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 23 அவன் அதில் ஏறிச் செல்லவில்லை; தள்ளிச் சென்றான்; ஆரம்ப நிலை; வாங்கிய புதிது; வீட்டை விட்டு வெளியே செல்ல காம்பவுண்டு தடுத்தது. மீறிச் செல்ல அவனுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. யாராவது அவனைக் கவனித்துக் கொண்டே இருந்தனர். அவசரப் பட்டு அவன் வெளியுலகம் செல்லாமல் தடை போட்டு இருந்தனர். முற்றத்திலேயே அவன் சுற்றிச் சுற்றி வந்தான்; விட்ட இடத்திலே கதையைத் தொடர்வது போல அவன் அந்த வண்டியை அங்கங்கே விட்டுச் செல்வான்; மறுபடியும் வந்து தொடர்வான்; அதை யாராவது எடுத்துக் கொண்டு போய் விடுவார்கள் என்ற எண்ணமே அவனுக்குத் தோன்றியது இல்லை; பத்திரிகைகளை அவன் படிப்பது இல்லை; அதனால் அவன் வீண் அவநம்பிக்கைகளைக் கொள்ளவில்லை. திருடன் என்பவன் கதையில்தான் வருவான்; நேரில் வருவான் என்பது அவனுக்குத் தெரியாது. இருட்டியதும் பேய் வரும் என்று தெரியும். நன்றாக இருட்டியபிறகு எல்லாரும் தூங்கிய பிறகு வீட்டுக்குக் கன்னம் வைத்துத் திருடுவார்கள் என்று கதை படித்து அதைச் சொல்லக் கேட்டு இருக்கிறான். பகலிலேயே அந்த சைக்கிள் களவு போய்விட்டது. அதைப்பற்றி அவர்கள் கவலைப்பட வில்லை. திருடு போய் விட்டது என்று யாரும் சொல்லவில்லை; சுரம் வரும்; போகும்; திருடும் அப்படித்தான்; யாராவது ஏதாவது எடுத்துக் கொண்டுதான் போவார்கள் அதைத் தடுக்க முடியாது. # இவர்கள் சைக்கிளை உள்ளே எடுத்து வைத்திருக்க வேண்டும். அது அவர்கள் தவறு முந்நூறு ரூபாய், அது ஒரு பெரிய இழப்பு இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/25&oldid=806845" இலிருந்து மீள்விக்கப்பட்டது