பக்கம்:பரிசு மழை.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 டாக்டர் ரா. சீனிவாசன் "புதிதாக வாங்கித் தருகிறேன்" என்றார். அவனைப் பெற்றெடுத்த பெருந்தகை. "முடியாது; அதுதான் வேண்டும்” என்று அடம் பிடித்தான். அவன் கொள்கை வீரனாகச் செயல்பட்டான். என்ன செய்வது? மூர்க்கனும் முதலையும் கொண்டது விடார் என்பது பழமொழி இவன் இரண்டும் அல்ல; ஆனால் கொண்டது விடவில்லை. அவர்களுக்கு சைக்கிள் போனது பெரிதாகப் படவில்லை; இவனை எப்படிச் சமாதானம் செய்வது என்பதுதான் பிரச்சனை. அந்த சைக்களுக்குப் புதிதாக உரிமை கொண்டவன். இவர்கள் வீடு தேடி வந்தான். 'இதுதானே உங்கள் சைக்கிள்?" என்றான். "எங்கே கிடைத்தது?" "கிடைக்கவில்லை; விலைக்கு வாங்கினேன்?" "இது எங்களது பையன் விட்டுக் கொண்டிருந்தான்; யாரோ கொண்டு போய் விட்டார்கள்" "அவன்தான் எனக்கு விற்றான்; நான் வாங்கிக் கொண்டு வந்தேன். முப்பது ரூபாய்க்கு வாங்கி இருக்கிறேன்" "மேலே போட்டுத் தருகிறோம்; எங்களுக்குக் கொடுத்து விடு” "அதுவே போதும்; அதற்குமேல் தேவை இல்லை" என்றான். அவன் பெருந்தன்மை இவர்களைக் கவர்ந்தது. "இதை ஏன் இங்கேயே விற்கிறாய்? வேறு இடத்தில் தந்தால் அதிக விலை கிடைக்குமே”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/26&oldid=806848" இலிருந்து மீள்விக்கப்பட்டது