பக்கம்:பரிசு மழை.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 25 'நான் விரும்பியவளையே மணந்து கொண்டு வாழ்கிறேன்; அது என் பிடிவாதம்; அதில் வெற்றி பெற்றிருக்கிறேன். குழந்தைகளும் பிடிவாதக்காரர்கள்; அவர் விரும்பிய தைப் பெறுவதில் மனநிறைவு பெறுகிறார்கள். அந்தப் பிஞ்சு உள்ளம் எனக்குப் புரிகிறது. அது இந்த வீட்டில் எடுக்கப்பட்டது' என்று விற்றவன் கூறினான். அவனுக்கு முப்பதுக்குமேல் கொடுத்தால் மறுத்து விட்டான். "அதையேதான் நான் பின்பற்றுகிறேன்" என்றான். "ஏன் முப்பது? அந்தத் தொகைக்குக் காரணம்?" "அது என் தேவை; அதுதான் எனக்கு இப்பொழுது தேவை: ஒரு நாள் சாப்பாட்டுக்கு என் தொழிலில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது” என்றான். அவன் விசித்திரமான போக்கு இவர்களைக் கவர்ந்தது. கேட்டதைக் கொடுத்துவிட்டு அந்த சைக்கிளைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். அவர்களுக்கு ஒரு சந்தேகம். அவனே திருடி இருக்க வேண்டும் என்று பேசிக் கொண்டனர்; என்றாலும் அவன் கண்ணியத்தை அவர்களால் நினைத்துப் பார்க்காமல் இருக்க முடியவில்லை; சிலர் அவசரப்பட்டார்கள் அவனைப் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்று. அவன் அவர்கள் பிடியில் அகப்படவில்லை; பிடிக்க முடியாமல் போய்விட்டது. மறுநாள் வந்தான். அவன் கையில் எதுவும் இல்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/27&oldid=806850" இலிருந்து மீள்விக்கப்பட்டது