பக்கம்:பரிசு மழை.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 டாக்டர் ரா. சீனிவாசன் பொருள் அவன் வசம் இல்லை அவனைத் திருடன் என்று கூறமுடியாது. சைக்கிள் காவல் நிலையத்திற்குப் போகவேண்டும்; அதுவரை அந்தப் பையன் அழாமல் இருக்கமாட்டான். "எனக்கு முப்பது ரூபாய்தேவை; எனக்கு இன்று எந்தத் தொழிலும் கிடைக்கவில்லை" என்றான். இவன் தேவை முப்பது அதற்காகத்தான் அதைத் திருடி இருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டனர். அவர்களுக்கு மனம் வந்து முப்பது ரூபாய் கொடுக்க விருப்பம் இல்லை; மறுத்து விட்டனர். அவன் அதைத் திருடினானா? அந்தச் சந்தேகம் தீரவில்லை. இதைத் தீர்ப்பது வாசகரின் சிந்தனைக்கு விடப்படுகிறது. 7. கண்ணாடி மூக்கில் மாட்டுவது அதனைக் கண்ணாடி என்கின்றனர். கண்ணில் ஆடுவது என்பதால் அதற்கு அந்தப் பெயர் வந்தது என்கின்றனர் சிலர்; ஆடி என்றால் முகம் பார்க்கும் கண்ணாடி என்பது பொருள். முகம் பார்க்கும் ஆடி கண்ணாடி, பார்வைக்குப் போடப்படுவதும் அந்தப் பொருளுக்கு உரிய சொல்லால் குறிப்பிடப் படுகிறது. கண் என்ற சொல்லுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பு இல்லை. அவன் மூக்கில் மாட்டி இருந்தாலும் அது கண்ணாடி என்று வழங்கப்படுகிறது. எழுத்தாளர்கள் நாற்பதைக் கடந்தால் கண்ணாடி மாட்டிக் கொள்ளாமல் இருக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/28&oldid=806852" இலிருந்து மீள்விக்கப்பட்டது