பக்கம்:பரிசு மழை.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 27 முடியாது. கண்ணாடி போட்டுக் கொண்டு இல்லை என்றால் அவன் எழுத்தாளியும் அல்ல; அவன் தலைவிதி; எழுதித் தொலைய வேண்டி இருக்கிறது; சிலர் தவறான தொழிலில் காலை வைத்து விட்டுப் பின் எடுக்க முடியாமல் அதிலேயே அவதிப் படுவதுதான் உலக இயல்பு. இவன் எழுத்தில் மயங்கி ஒருத்தி இவனை மணந்து கொண்டாள். அவள் கண்டது எதுவும் இல்லை என்று இப்பொழுது வருத்தப் படுகிறாள். கவலைப்பட்டு என்ன பயன் காலையில் காஃபி சூடாகக் கொண்டுவந்து வைத்துக் கொண்டு இருக்கிறாள். நேரம் போனது அவனுக்குத் தெரியவில்லை; அவனுக்குத் தெரியவில்லை அந்த காஃபிக்குத் தெரிந்து இருக்கிறது. அது ஆறிவிட்டது. அதை வாயில் வைத்தான்; சுவைத்தது; ஆனால் சூடு இல்லை; அதன் மணம் எழவில்லை. அவன் அவள் கணவன்; அதனால் அதிகாரமாகக் கேட்டான். "இந்தக் காஃபி யார் குடிப்பார்கள்? சில் என்று இருக்கிறதே!" என்று கத்தினான். "இது ஆறிவிட்டது; எதையும் சூட்டோடு குடிக்க வேண்டும்" என்றாள். அவன் எதையோ தேடிக் கொண்டிருந்தான். "என்ன தேடுகிறீர்கள்?" "கண்ணாடி' என்றான். "எழுதும் போது பேனா தெரிவதில்லை. இது தெரியுமா?" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/29&oldid=806854" இலிருந்து மீள்விக்கப்பட்டது