பக்கம்:பரிசு மழை.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 டாக்டர் ரா. சீனிவாசன் "நீ வரும்போது எந்தக் குறையும் தெரிவதில்லை; நீ இல்லாவிட்டால் எல்லாமே குறையாக இருக்கிறது" என்று தணிந்து பேசினான். "கண்ணாடியும் அப்படித்தான்; அது கண்ணில் இருக்கும்போது அது தெரிவதில்லை" என்றாள். அவள் ஒப்புமை அவனுக்கு வியப்பைத் தந்தது. "உன்னைப் பாராட்டுகிறேன்” என்றான். "என்னைப் பாராட்டிப் பயன் இல்லை. இது வள்ளுவர் குறள்" என்றாள். "இதை நான் படித்ததே இல்லையே” என்றான். "திருக்குறளும் படிக்காவிட்டால் நீர் எப்படி எழுத முடியும்?" என்று கேட்டாள். "அதைப் படித்து விடுவதால் வேறு எதையும் எழுத முடிவதில்லை." என்றான். "உங்கள் கற்பனை வளத்துக்கு நீங்கள் அதைப்படித்து இருக்கவேண்டும்" என்றாள் "கண்ணாடி அணிந்திருந்தால் அதுதெரிவதில்லை அது இல்லை என்றால் அதுதானே தெரியும்" என்றாள். அவர்களது திருக்குறள் யாது. ஆர்வம் எழுகிறது. தலைவன் இல்லை என்றால் அவன் பிரிந்து இருந்தால் அவன் குறைகள் தலைவிக்குத் தெரிகிறது. அவன் நேரில் வந்து விட்டால்அவன் குறைகளே அவளுக்குத் தென்படுவது இல்லையாம்; கண்ணுக்கு மை எழுதும் போது மை தீட்டும் கோல் தெரிவதில்லை. அதுபோலக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/30&oldid=806858" இலிருந்து மீள்விக்கப்பட்டது