பக்கம்:பரிசு மழை.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 29 கொழுநனைக் காணும்போது அவன் தவறுகள் தெரிவ தில்லை. இது வள்ளுவர் தரும் கற்பனை. குறள் எது? தெரியாவிடில் எண் தந்திருக்கிறோம்; குறளைப் புரட்டித் தெரிந்து கொள்ளலாம். எண்: 1285. 8. அம்மா அவள் பையன் படித்துவிட்டான்; அவன் பெற்றோர்கள் அவனுக்கு மணம் முடித்துவிட்டார்கள். விரலுக்கு மேல் வீக்கத்தை அவர்கள் தேடிக் கொண்டார்கள்; பெண் கொடுத்தவர்கள் அவன் படிப்பு, உயரம், நிறம், அவன் நிழற்படம், உத்தியோகம், அவனுடைய நம்பிக்கையான எதிர்காலம் இவற்றைப் பார்த்துக் குரங்குப் பிடியாக அவனைப் பிடித்தார்கள். பலர் பையனுக்குக் கலியாணம் செய்து வைத்து அதில் கிடைக்கிற புதுவாழ்வில் குளிர்காய முடியும் என்ற நம்பிக்கை வைத்துக் கொள்வதும் உண்டு; இதனால் ஏற்படுகின்ற அதிர்அடிப் பிரச்சனைகளில் இவர்கள் ஈடுபடவிரும்பவில்லை. வரன் என்று பேசி இவர்கள் உரம் பெற விரும்பவில்லை. நல்ல மருமகள் அதுவே தரம்; அவனுக்கு அமையும் வரம் என்று மகிழ்ந்தார்கள். பெட்டியில் ஏறிய பிறகு நெருக்கடி ஏற்படுவதால் ஏற்படுகின்ற சச்சரவுகள் அவள் புகுந்தபோது ஏற்படவே இல்லை. காரணம் அவன் டெல்லிக்கு மாற்றலாகி விட்டான். மகள் வலது காலும் வைக்கவில்லை; இடது காலும் இங்கு வைக்கவில்லை; நேரே அவள் வீட்டுச் சீதனங்களாக அவன் வீட்டுச் சீமாட்டியாக அங்குச் சென்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/31&oldid=806860" இலிருந்து மீள்விக்கப்பட்டது