பக்கம்:பரிசு மழை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 ல் டாக்டர் ரா. சீனிவாசன் இவள் சென்ற அதிருஷ்டம்; நன்மைகள் வந்தன; அதற்கு நேர்க்காரணத்தைக் கூறுவது பழக்கம் இல்லை; இவள் சென்றதால்தான் அவனுக்கு அதிருஷ்டம் அடுக்கு மொழியில் வந்தது என்று கூறிக் கொண்டார்கள். புதிய வீடு கட்டினர். அது குடி இருக்க என்பதை விட அவர்கள் கணக்கில் வராத பணத்தைத் திணிக்கும் சாதனமாக ஆக்கினர். - தாஜ்மகால் ஒருகாலத்தில் அதிசயமாக இருந்தது: ஏழு அதிசயங்களில் ஒன்று என்று புத்தகங்களில் எழுதி வைத்தனர். அது இன்று தோற்று விடும் என்ற அளவுக்கு இன்று கருப்புப் பணம் கட்டிடங்களை வெள்ளைப் படுத்துகிறது. அந்த அளவுக்கு இதனை உயர்த்திக் கூற முடியாது என்றாலும் அவன் கட்டிய வீடு கண்ணைக் கவர்ந்தது; எல்லாம் சலவைக் கற்கள்; வீடு கல்லைக் கொண்டு கட்டப்படவில்லை; காகித நோட்டுகளை வைத்துக் கட்டப்பட்டது என்று சொல்லும்படி அது அந்த வீட்டுக்கு உயர்வு தந்தது. தாயின் உள்ளம் அதைக் கண்டு மகிழ்ந்திருக்க வேண்டும்; பணத்தை அவன் வீணாக்குகிறான் என்ற நினைப்புக்கு இடம் கொடுத்தாள். அவளுக்கே அவளை அறியாமல் ஒரு சிறு பொறாமை என்றால் அது தவறாகாது. தன் வீடு சென்னையில் உள்ளது; அது முப்பது வருஷங் களுக்கு முன் கட்டியது; தரையைக் கூட வழுக்க வைக்க முடியவில்லை. அவர்களைப் போலவே அந்த வீடும் மூத்து விட்டது. வயதானால் எல்லாம் பழைமை பெறுவது இயற்கை; அதைப் புதுப்பிக்கலாம்; அது அவர்களுக்குத் தேவை இல்லை. வாய்தவறி அவள் வார்த்தைகளில் மிகை ஏற்பட்டு விட்டது; "காசை மிச்சப் படுத்தி இருக்கலாம் ஆடம்பரச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/32&oldid=806862" இலிருந்து மீள்விக்கப்பட்டது