பக்கம்:பரிசு மழை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 31 செலவுகளைக் குறைத்து இருக்கலாம்" என்று அறிவுரை கூறினாள். அவனுடைய சூழ்நிலை அந்த அம்மாவுக்கு விளங்கவில்லை. அவள் நச்சரிப்புத் தாங்க முடியவில்லை. "அம்மா! வாயை மூடிக் கொண்டிரு; விருந்தாளி போல் இருந்து விட்டுப்போ" என்று கூறினான். அவள் டில்லியில் சில நாள் தங்கிவிட்டு ஆக்கிரா போவது; முடிந்தால் காஷ்மீர் பிரச்சனையில் கால் வைப்பது அங்கிருந்து ஒரு நீண்ட பயணம் காசிக்குப் பறந்து காசு செலவு செய்வது என்று எல்லாம் திட்டங்களை வைத்திருந்தாள். அவளால் அந்த வீட்டில் இரண்டு நாளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை; தான் அன்னியமாகி விட்டது போன்ற உணர்வு ஏற்பட்டு விட்டது. "வாங்க! நம்ம ஊருக்குப் போகலாம்" என்று தன் உடன் வாழ்ந்து வரும் தோழர் அவள் கணவரை அழைத்தாள். "குளிர் சாதன அறையில் சுகத்தைக் கண்ட அவர் அதைவிட்டு வர மனம் வரவில்லை; என்றாலும் அவர் மனைவி சொல்லைத் தட்டாத நல்ல பிள்ளையாக வாழ்ந்தவர். மறுபடியும் தம் தாயகம் வந்து சேர்ந்தனர்; பழைய வாழ்க்கை சலனமில்லாத கட்டிடம்; பழைய டி.வி. சிவாஜி, ரஜினி, பிரபுதேவா இந்தமாதிரி சூழ்நிலைகளில் அவர்கள் நிம்மதி காப்பற்றப்பட்டது. விடுமுறைக்கு மகன் தன் மலரும் நினைவுகளுக்கு வந்து சேர்ந்தான்; அவள் அந்த வீட்டுக்கு வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/33&oldid=806864" இலிருந்து மீள்விக்கப்பட்டது