பக்கம்:பரிசு மழை.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 ல் டாக்டர் ரா. சீனிவாசன் அவள் செல்வக் குடியில் பிறந்தவள்; செருக்கோடு வாழ்ந்தவள். தமிழை மறந்து இந்தியில் பேசுகிறாள்; தமிழ்ப் படங்களை அவளால் இங்கு வந்து பார்த்துக் கொண்டு இருக்கும் சூழ்நிலை அவளால் ஏற்க முடியவில்லை. அந்தச் சில நாளில் அவள் தன் தாயின் மடியில் தவழ்ந்து விளையாட விரும்பினாள். அவள் உரிமையில் அவன் தலையிடுவதை அவள் விரும்புவதில்லை; புதிய உலகம்; அதன் போக்குகளை அறிந்தவளாக விளங்கினாள் அவனுக்குப் பழைய சேற்றில் புரளத் தன் உரிமையைத் தேடினான்; அதன் சுகம் தனி. அவன் மட்டும் வந்தான். 'ஏன்டா அவளை அழைத்து வரவில்லை?" என்றாள் அவன் தாய். "அவளால் இங்கு இருக்க முடியாது. அவளைச் சிரமப்படுத்தத் தேவை இல்லை" என்றான். மறுப்பு எதுவும் சொல்லாமல் அவள் பொறுப்பு அவளைத் தடுத்தது. அவன் சமையல் அறைக்குச் சென்றான்; வறுத்து வைத்த வறுவல்கள், பொறித்து வைத்த அப்பளங்கள், எடுத்து வைத்த சுவைகள் அவனை இழுத்தன; அவனே அவற்றை எடுத்துச் சுவைத்தான்; ஒன்று இரண்டு வாயில் போட்டான். "ஏன்'டா நான் போட மாட்டேனா? என்னடா அவசரம்?” என்று கூறிவிட்டாள். அவனுக்குச் சுறுக்கென்று. தைத்தது. "என்னம்மா நான் விருந்தாளியா?" என்று கேட்டான். அவன் குற்ற உணர்வு அவனை வருத்தியது; அவன் தொடர்ந்து பேசவில்லை. எதையும் விவாதிக்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/34&oldid=806866" இலிருந்து மீள்விக்கப்பட்டது