பக்கம்:பரிசு மழை.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 33 தோழர் உள்ளே வந்தார். "என்னடா சாப்பிட வரவில்லையா?” என்று கூப்பிட்டார். அவன் பேசாமல் வந்து இலைமுன் உட்கார்ந்தான். விருந்தாளிபோல் சாப்பிட்டு விட்டு எழுந்தான்; உற்சாகம் சிறிது தணிந்தவனாகக் காணப்பட்டான். 9. படிப்பு முடியட்டும் மூத்தவள் அவளைப் பெண் பார்க்க வந்தனர்; அப்படி ஒன்றும் அதிகம் வயதாகவில்லை. இளையவளை நோக்க இவள் மூத்தவள் ஆகிவிட்டாள். அவ்வளவுதான்; வேறு ஒன்றும் இல்லை. மூப்பு இளமை என்பன ஒருவரை வைத்து மற்றவர் களைக் குறிப்பிடும் சொற்கள் ஆகிவிட்டன. இயல்பாகவும் மூப்பு வருவது உண்டு. அப்படி இவள் மூத்தவள் அல்ல. மாப்பிள்ளை அவனுக்கு முழுவதும் பிடித்து விட்டது. தலையில் இருந்து கால்வரை பிடித்துவிட்டது; உருவும் திருவும் அவன் அறிவுக்கு அறிமுகம் ஆயின. மறுப்பு எதுவும் சொல்வதற்கு இல்லை. சுண்டைக்காய் வெண்டைக்காய் விவகாரங்கள் பெரியவர்கள் ஏற்கனவே பேசி முடித்தனர். வார்த்தை தரவேண்டிய கடைசி கட்டத்துக்கு வந்து நின்றார்கள். சுயம்வர காண்டம் சுபமாக முடிந்தது. பெண் வீட்டார் காத்திருந்தனர் அவர்கள் வாய் அசைவுக்கு; துணிந்து சொல்ல முடியாமல் தணிந்து சென்றனர். 'என்ன டா சொல்கிறாய்?' என்று அவன் பெற்றோர்கள் கேட்டனர். "வீட்டுக்கப் போய்ப் பேசலாம்” என்றான். கு ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/35&oldid=806868" இலிருந்து மீள்விக்கப்பட்டது