பக்கம்:பரிசு மழை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 ல் டாக்டர் ரா. சீனிவாசன் பையன் அவரப்படவில்லை; அறிவாளி என்று மதிக்கப்பட்டான். "தாவணி அணிந்திருந்தாளே அந்தப் பேரணி யார்?" என்று கேட்டான். "அவள் வீட்டில் அவளுக்குப் பின்னால் பிறந்தவள்; தங்கை" என்றனர். "என்ன செய்து கொண்டிருக்கிறாள்?" என்றான். "படித்துக் கொண்டிருக்கிறாள்" என்றனர். அவன் அவசரப்படவில்லை; அவன் அறிவாளி என்பதை நிதானத்தில் காட்டினான். "என்னடா யோசிக்கிறாய்?" என்று மறுபடியும் அவன் அப்பா கேட்கிறார். "படிப்பு முடியட்டுமே என்ன அவசரம்?" என்றான். இவன் எதற்கும் அவசரப்படுவது இல்லை; தன் படிப்பு முடியட்டும் என்று கூறியதாக அவர்கள் எடுத்துக் கொண்டன்ர். உண்மை எது? வாசகர்கள்தாம் முடிவு செய்ய வேண்டும். 10. சமநிலை அறுபதை எட்டிப் பிடித்தார்; என்றாலும் ஆசைகள் அவரைவிட்டு விலகவில்லை. முதல் மனைவி அவரை விட்டு விலகி விட்டாள்; காச நோய், காசு செலவு செய்தும் பாசபந்தங்களை நீக்கி அவள் அவரிடமிருந்து விலகி விடைபெற்றாள். அவருக்கு மனைவி தேவைப்பட்டாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/36&oldid=806870" இலிருந்து மீள்விக்கப்பட்டது