பக்கம்:பரிசு மழை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 டாக்டர் ரா. சீனிவாசன் திரவியம் தேட அவர்கள் திசைகள் தோறும் பரவிச் சென்று விட்டனர். ரேஷன் கார்டிலும் வேறு யாரையும் அவள் உடன் சேர்த்து எழுதவில்லை. அஞ்சல் தொடர்புகள் அவ்வப்பொழுது விட்டு விட்டு ஏற்பட்டுக் கொண்டிருந்தன. அவள் தனிமை அழித்துப் பொருள் ஈட்டும் அன்றாடம் திருடர்கள் கண்ணைக் கவர்ந்தது. மூடிய கதவு ஊடல் கொண்ட பழைய இலக்கியக் காதலிகள் வீட்டுக் கதவு போல் மூடிக்கிடந்தது; அவர்கள்தாம் கதவை மூடி வைப்பார்கள் என்று படித்திருக்கிறோம்; போருக்குச் சென்றுவந்த வீரன் திரும்பிவந்தால் அவனை வரவேற்க அழகிய கதவுகளைத் திறந்தார்கள் என்று பரணி நூல்கள் பாடுகின்றன. இன்று கள்ளத் தொழிலாளர்கள் கதவு தட்டுகிறார்கள். அவசரப்பட்டுத் திறந்துவிட்டால் ஆபத்துகள் ஆயத்தம் ஆகி விடுகின்றன. கோயில் கதவு திறக்கப்பட்டது; அந்தத் தெய்வங்கள் முரண் பிடிப்பது இல்லை; அதனால் அவற்றைச் சிதைப்பது இல்லை; நகைகளை மட்டும் கழற்றிக் கொண்டு அபிஷேகம் செய்ய அவிழ்த்துவிட்டுச் செல்கின்றனர் தெய்வங்கள் சிலைகள்; அவர்களுக்கு எந்த ஊறும் நிகழ்வது இல்லை. அவர்களுக்கு தெய்வமும் பூசாரியும் ஒன்றுதான்; நட்பு பகை தெய்வங்கள் பாராட்டுவது இல்லை. இருப்பதைச் சுருட்டிக் கொண்டார்கள், பறிப்பதைப் பறித்துக் கொண்டார்கள்; அறுப்பதை அறுத்துக் கொண்டார்கள்; அசையக் கூடாது என்று நிழற்படம் எடுப்பவர்கள் போல் ஆணையிட்டார்கள். "சிரிக்கலாமா?” என்று கேட்டாள். "அசையக் கூடாது" என்று அச்சுறுத்தினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/40&oldid=806880" இலிருந்து மீள்விக்கப்பட்டது