பக்கம்:பரிசு மழை.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 39 "கத்தப் போகிறேன்” என்றாள். "சத்தம் போடக் கூடாது" என்று மிரட்டினார்கள். "சத்தம் போடாமல் எப்படிக் கத்த முடியும்? அந்த வித்தை யாருக்குமே தெரியாது" என்றாள். "கீச் மூச்சு என்று பேசக் கூடாது. நாங்கள் இந்த இடத்தைவிட்டுப் போகும் வரை யாரையும் அழைக்கக் கூடாது.” "போனில் பேசுகிறேன்" என்றாள். "அந்தச் சிரமம் உனக்கு வேண்டியது இல்லை; அது ஏற்கனவே கெட்டுதான் இருக்கிறது; அந்த உதவியை அவர்களே செய்து வைத்திருக்கிறார்கள்” என்றார்கள். "நாய் உங்களை விடாது" என்றாள். "அது விசுவாசம் உள்ளது; நிறைய பிஸ்கத்துகள் போட்டு இருக்கிறோம்" என்றார்கள். "கத்தாமல் இருக்க முடியாது; கட்டு அவிழ்த்து விடுங்கள்” என்றாள். "உயிர்மேல் ஆசை இருந்தால் நீ கத்தக் கூடாது" என்றார்கள். 'உயிர்மேல் ஆசை துளியளவும் கிடையாது. பற்றுதலை எல்லாம் நீங்கள் நீக்கி விட்டீர்கள்; இனி பட்டினி கிடந்து சாவதுதான் முடியும்; அதைவிட நீங்கள் கொலை செய்தால் உங்களுக்குப் புண்ணியம் சேரும்” என்றாள். அவள் வேண்டுகோளை அவர்கள் நிராகரித்து விட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/41&oldid=806882" இலிருந்து மீள்விக்கப்பட்டது