பக்கம்:பரிசு மழை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 டாக்டர் ரா. சீனிவாசன் "கொலை செய்வதற்கு எங்களுக்கு யாராவது பணம் கொடுக்க வேண்டும்; அப்பொழுதுதான் செய்வோம். உன்னைக் கொல்வதால் எங்களுக்கு எந்த லாபமும் இல்லை" என்றார்கள். "நீங்கள் உயிர் பிழைக்க இந்த இடத்தை விட்டுப் போக என்னைக் கொன்றுதான் ஆகவேண்டும்; இல்லாவிட்டால் கத்துவேன்" என்றாள். "தயவு செய்து கத்த வேண்டாம்; பாதிப் பொருளை விட்டுச் செல்கிறோம்; பாதி உனக்கு பாதி எங்களுக்கு” என்றார்கள். . ஒப்பந்தத்திற்கு அவள் சம்மதம் தெரிவித்தாள். உயிர்மேல் அவளுக்கு ஆசை வந்தது; கத்துவதை நிறுத்தினாள் அவர்களும் சத்தம் செய்யாமல் அந்த இடத்தைவிட்டு அகன்றனர். மறுநாள் காவல் நிலையம் பத்திரிகை நிருபர்கள் அவளைப் பேட்டி கண்டனர். "எப்படி உயிர் தப்பினாய்?" என்று கேட்டனர். "கத்தாமல் இருந்தால் பாதி தந்து விடுவதாகச் சொன்னார்கள்; இது சின்ன விஷயம்; ஒப்புக் கொண்டேன்; அவர்கள் என்னை விட்டு விட்டார்கள்” என்றாள். 'அவர்களை அடையாளம் காட்ட முடியுமா? 'காட்டிக் கொடுக்கும் பழக்கம் எனக்கு இல்லை; சொன்னால் சொன்னதுதான்" என்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/42&oldid=806884" இலிருந்து மீள்விக்கப்பட்டது