பக்கம்:பரிசு மழை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 6 டாக்டர் ரா. சீனிவாசன் அவள் படித்த பள்ளியில் இருந்து அதற்கு உரிய பேர் ஊர்தியில் ஒரே மாதிரி உடையுடுத்திய ஒத்த வயதினர் மவுன அஞ்சலி செலுத்தினர்; அவர்களோடு இயங்கித் திரிந்தவள்; இன்று உறங்கிக் கிடக்கிறாள்; அவள் இறந்து விட்டாள் என்று கூறமாட்டார்கள்; அவளைப் பார்த்துதான் 'உறங்குவது போலும் சாக்காடு' என்று வள்ளுவர் எழுதியிருக்க வேண்டும். அப்படிச் சொல்லத் தோன்றுகிறது; ஒரே நாள்; அதனால்தான் அவள் தூங்குவது போல இருந்தது. அவள் இனி எழுந்திருக்க மாட்டாள் என்று நினைக்கும்போதுதான் அவள் இறந்து விட்டாள் என்று சொல்லத் தோன்றுகிறது. அவள் இறந்து விட்டாள். அதன் பிறகு "அவள் அப்பா யார்? அம்மா யார்?" என்று தெரிந்தது. அந்த ஆராய்ச்சி எழுந்தது; பதினைந்து ஆண்டுகள் வளர்த்து ஆளாக்கிய அருமைச் செல்வி அரைமணி நேரத்தில் கண்மூடினாள் என்றால் அந்த அதிர்ச்சி பெரிது; ஆழமானது; அழுதால் தீர்வது அன்று. ஆண்டாண்டு அழுது புரண்டது அந்தக் காலம், அதிர்ச்சிகள் அன்றாட நிகழ்ச்சிகள் ஆகும்போது எதுவும் மெல்ல ஆறத்தான் செய்கிறது. அவர்கள் மோன அழுகை அவர்களோடு நின்றது. அவர்கள் அன்றாடக் கடமைகளில் ஈடுபட்டார்கள்; நாள் செல்லச் செல்ல அந்த மாதிரி ஒரு பெண் இருந்தாள் என்று கூட யாரும் பேசிப் பார்க்க முடியவில்லை. மகளிர் வண்டிகள் ஏதாவது யாராவது ஊர்ந்து சென்றால் அவர்கள் அவளை நினைவுப்படுத்தினர். ஆண்டுகள் மூன்று கடந்தன; அவள் மாண்ட நினைவும் மறந்துவிட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/44&oldid=806886" இலிருந்து மீள்விக்கப்பட்டது