பக்கம்:பரிசு மழை.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 43 அன்று எதிர்பாராமல் அவள் தம்பியைக் காண நேர்ந்தது. அதே நிறம்; அதே சாயல்; அதே மாதிரி தோற்றம்: அவள் மிகவும் சுருசுருப்பாக இருந்தாள். இவன் மந்தமாக இருப்பான். இதுதான் வித்தியாசம், "எங்கே போகிறாய்?" என்று பேச்சுக் கொடுக்கப் பட்டது. "டியூஷனுக்கு" என்றான். மற்றும் சில ஏபி சிடி வீஷயங்களில் பேச்சுக் கொடுத்துப் பேசப்பட்டது. அவன் தாய் மொழி சிந்தி, அவன் பயில்வது இந்தி, பிறரோடு பேசுவது தமிழ், அதில் சிதைந்த சிந்திச் சொற்கள் அவள் சிவந்த வாயை நினைப்பூட்டின. அவன் சொற்களில் இன்றைக்கும் அவள் எதிர்ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறாள். 13. அமரத்துவம் தொடர்ந்து தொலைக்காட்சியில் நடிக்க விரும்பினார்; நடுவில் ஆள் இல்லாமல் இருந்தார். இடைவெளிக்குப் பிறகு அவர் நடிப்பை நடைபாதையாகக் கொண்டார். பழைய பட உரிமையாளர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். "நடிக்க வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டனர். "காதல் காட்சிகளில் நடித்துவிட்ட நீர் இப்பொழுது அழுகைக் காட்சிகளில் அவலப்படுவது சரி என்று படவில்லை” என்றனர். அவர்க்கு அது விளங்கவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/45&oldid=806887" இலிருந்து மீள்விக்கப்பட்டது