பக்கம்:பரிசு மழை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 டாக்டர் ரா. சீனிவாசன் "அப்பா வேஷங்களில் நடிக்கிறீர்; அதில் அழுகையைத் தானே காட்ட வேண்டி இருக்கிறது" என்று அறிவுறுத்தினர். "முதுமைப் பாத்திரமே அழுகையின் க்ஷேத்திரம்" என்பது அவர்கள் கருத்தாக இருந்தது. "கதைகள் அப்படி, நாம் என்ன செய்யமுடியும்?" என்றார் நடிகர். "காதல் மன்னனாக நடித்த நீர் இன்று இந்த முதுமைக் காட்சிகளில் வருவது உங்கள் இமேஜைக் கெடுக்கிறது" என்றார்கள். "என்னுடைய முழு இமேஜே இப்பொழுதுதான் உணர்த்த முடிகிறது; வாழ்க்கை என்பது இளமையும் அழுகையும் கொண்டது; இந்த முழுமையைக் காட்டுகிறேன்" என்றார். "பழைய படங்களின் மதிப்புக் குறைகிறதே' என்றனர். "பழைமை மறையத்தான் செய்யும்; காதல் காட்சிக்குப் புதியவர்கள் தோன்றுகிறார்கள்; அவர்கள் நிச்சயம் என்னை வெல்வார்கள்; அவர்களோடு போட்டி போட முடியும் என்று நான் நினைக்கவில்லை; காதலர்கள் தோன்றிக் கொண்டே இருப்பார்கள்; அவர்கள் என்னோடு இந்த முதுமைக் காட்சிகளில் போட்டி போட முடியாது: அதற்கு நாங்கள்தாம் தகுதி உடையவர்கள்” என்றார். "இருந்தாலும் உங்களைப் பார்த்தால் உங்கள்மீது இரக்க உணர்வுதான் தோன்றும் தோன்றில் புகழுடன் தோன்றுக’ என் ட்யா அதை எண்ணிப்பாருங்கள். தானறு ற குற புதை ரு கழும்படி உங்கள் தோற்றம் அமையக் கூடாது” என் முமபடி றற து று குறளுக்குப் புதுவிளக்கம் தந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/46&oldid=806888" இலிருந்து மீள்விக்கப்பட்டது