பக்கம்:பரிசு மழை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 45 "கதைகள் மாறலாம்; தோற்றங்கள் மாறலாம்; நடிப்பு மாறாது; அது அமரத்துவம் வாய்ந்தது. அன்று என்னைக் 'காதல் மன்னன்' என்று கூறியது என்னைப் பற்றி அல்ல; காதல் காட்சிகளில் நான் சிறப்பாக நடித்து இருக்கிறேன் என்றுதான் பாராட்டினார்கள்; அந்தப் பாராட்டு நடிப்புக்கே அன்றி என் வடிவுக்கு அன்று இன்று என்னை ஒரு முதியவர் அறிஞர் என்று கூறலாம்; அதுவும் என் நடிப்புக்குத்தான், நடிப்பு அமரத்துவம் வாய்ந்தது. முதுமையில் நடிக்க வெட்கப்படத் தேவை இல்லை. அன்றும் நான் நடிகன்: இன்றும் நடிகன்" என்றார். 14. தலை குனிவு அவர் ஒரு தமிழ்ப் பேராசிரியர். தமிழ் ஆசிரியர் என்றால் மேடைப்பேச்சு அவர் உடன்பிறப்பு ஆகிறது; அவரிடம் பொருட் செல்வம் இல்லை. ஆனால் சொல்லின் செல்வன்' என்று பாராட்டப் பெற்றார். அதை வைத்துக் கொண்டு பட்ஜட் அவரால் தயாரிக்க முடியவில்லை என்பது அவர் மனைவி அவர் மீது காட்டும் குற்றச் சாட்டு. அவர் என்ன சம்பாதித்தார்? என்ன சாதித்தார் என்று எதிர்க் கட்சியில் இருந்து தேர்வுக் கணைகள் எழும். அவர் தம் சாதனைகளை அடுக்கிச் சொல்வது எதிர்க்கட்சிக்கு வேதனையாகவே இருக்கும். "போதும் உங்கள் பெருமை” என்று அடக்கு முறையைப் பலமுறை அவர் மனைவி கையாள்வது வழக்கம். இன்று அவர் ஒய்வு பெற்று இருக்கிறார்; அதனால் அவருக்குச் சாய்வு நாற்காலி ஆதரவு தந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/47&oldid=806889" இலிருந்து மீள்விக்கப்பட்டது