பக்கம்:பரிசு மழை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 டாக்டர் ரா. சீனிவாசன் யாராவது பழைய மாணவர் இவரைச் சந்திப்பார்கள்; அடங்கிக் கிடக்கும் பழம் பெருமை துள்ளி எழுந்து விளையாடும்; அதைத் தூண்டிவிட வருபவர் சுடர் விளக்காகத் திகழ்வர்; வந்தவர் கேட்கும் முதல் கேள்வி "என்னைத் தெரிகிறதா? என்பது. "சுருள்முடி அருள் வரதன்" என்பதை அவர் அறிந்து கொண்டார். அவனுக்கு இப்பொழுது வழுக்கைத் தலையாகி விட்டது. "சார்! அன்று இலக்கணத்தில் பூஜ்யம் வாங்குவானே இன்று அவன் இராஜ்யம் ஆளுகிறான்" என்றான். மந்திரி மதனகோபாலை அவன் குறிப்பிட்டான். "பெருமைப்படுகிறேன்” என்றார். "கோணங்கி கோவிந்தசாமி தெரியுமா? அவன் இன்று தமிழ்ப்பட ரேலங்கியாகி விட்டான்" என்றான். "அவன் அன்றே அதுக்குத்தான் லாயக்கு என்று தீர்மானித்தேன்; குரங்குப் பையல்" என்று பாராட்டினார். "கட்அவுட் கந்தசாமி தெரியுமா? அடிக்கடி 'கிளாஸ்கட் செய்வானே இன்று அவன் 'நாக்அவுட்' மல்வீரனாகத் திகழ்கிறான்" என்றான். - "அவனுக்கு அதுதான் அவுட்லெட்' முன்னுக்கு வந்திருக்கிறான்" என்றார். "கிறுக்கெழுத்து குமரவேல் தெரியுமா அவன் இன்று ஒவியப் புகழ் சித்திரக்காரன் ஆகிவிட்டான்" என்றான். "அந்தக் கிறுக்கன் அதற்குத்தான் லாயக்கு என்று அன்றே முடிவு செய்தேன்" என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/48&oldid=806890" இலிருந்து மீள்விக்கப்பட்டது