பக்கம்:பரிசு மழை.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 47 "எதுகைமோனை வைத்துக் கவிதை என்று எழுதிப் பரிசு பெறுவானே அவன் இன்று கவி அரசு ஆகிவிட்டான்" என்றான். "அவார்டுகள் வாங்கி இருக்கிறான் என்று பத்திரிகையில் படித்தேன்; மிக்க மகிழ்ச்சி" என்றார். "அன்று சிநேகிதர்களுக்கு ஒசியில் டிஃபன் காப்பி வாங்கித் தருவானே இன்று அவன் கொடை வள்ளல் வடமலை என்று புகழப்படுகிறான்" என்றான். "நீங்கள் அன்று வகுப்பில் பாடம் நடத்தியது இன்றும் நினைவுக்கு வருகிறது. சிலவரிகள் மறக்கவே முடியவில்லை" என்றான். பெருமையில் தலை குனிந்தார்; "வீணாகப் புகழ்கிறாய்" என்று நாகரிகமாகப் பேசினார். "அந்த வரிகளைச் சொல்கிறேன் கேளுங்கள்' என்றான். 'கச்சணிந்த அவள் தோற்றம் கண்டு துஷ்யந்தன் இச்சை கொண்டான்' என்று ஒப்புவித்தான். இப்பொழுதும் அவர் தலை குனிந்தார். ஏன் என்று தெரியவில்லை. 15. பொய் அழகானது அவன் படித்தது பொறியியல்; அவனுக்கு இப்பொழுது படியாதது மணவியல்; அவனுக்காகக் காத்திருந்த கரங்கள் சாத்திரச் சுவடிகளைத் தேடின; கோத்திரங்கள் ஆராயப்பட்டன: தரகர்கள் அவன் வீட்டில் அணிவகுத்து நின்றனர். படங்களைக் காட்டி நங்கையர்க்கு அங்கு இடங்களைத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/49&oldid=806891" இலிருந்து மீள்விக்கப்பட்டது