பக்கம்:பரிசு மழை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 & டாக்டர் ரா. சீனிவாசன் தேடினர். பட்டங்களைக் கூற அவன் அவற்றிற்கு இட்டப்படவில்லை என்று தெரிந்தது. "படித்த பெண்ணே வேண்டாம்” என்பது அவன் வடித்த கட்டளையாக இருந்தது. அது படிவதாக இல்லை. "காலம் கெட்டு விட்டது; படிக்காத பெண்ணே கிடைக்காது” என்று அவர்கள் கைவிரித்தனர். அதிகம் படிக்காதவளாக இருந்தால் போதும் எந்த அருந்ததியையும் தான் ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்தான். தரகனின் மிஷன் கமிஷன்: படிக்காதவளைப் படித்தவளாகக் காட்ட இயலாது; படித்தவளை அவள் எடையைக் குறைத்துக் காட்ட முடியும் என்று எண்ணி ஒருத்தியைக் காட்டி முடித்தான். மணமேடை ஏறிய அவள் சடங்குகளைக் கடந்து அவன் மனைவி ஆயினாள். தனித்து அவர்கள் சந்தித்த இரவு முதல் இரவு: இனித்த பேச்சுகளைப் பேசி உள்ளம் கலக்க அவர்கள் உரையாடினர். அதற்கு முன் அவள் அதற்கு ஒர் அணை போட்டாள்; அது தலை அணை அல்ல; கல்லணை அல்ல; சொல்லணை. "நான் ஒர் உண்மை சொல்லப் போகிறேன்; என்னை ஏற்றுக்கொள்ள முடியுமா” என்று வினவினாள். அவன் அதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/50&oldid=806893" இலிருந்து மீள்விக்கப்பட்டது