பக்கம்:பரிசு மழை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 49 "காதலன் ஒருவன் பெயரை அவள் சொல்லப் போகிறாள்; அந்தப் பாதகனை மன்னிப்பது” என்று அந்தச் சாதனைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டான். "நான் படித்தவள் பட்டம் வாங்கி இருக்கிறேன்; இந்த மெய்யை அவன் தரகன் உங்களுக்குக் கூறவில்லை” என்றாள். "பொய் அழகானது; மெய்யை மறைத்தது அதைவிட அழகானது' என்பதை உணர்ந்தான். "படிப்புத் தடையாக இல்லை; துடிப்பு அவன் பிடிவாதத்தை வென்று விட்டது. கவிதைக்கு மட்டும் அல்ல; கலியாணத்துக்கும் அது அழகு எது? பொய் என்பதே இருவரும் ஒப்புக் கொண்டனர். 16. தத்துவ விசாரணை “தாமரை மேல் நீர்த்துளி" போல வாழ வேண்டும்” பொறுப்புள்ள பதவியில் இருந்தவர் அறிவிப்புத் தந்தார்; அவர் அந்தக் கூற்றில் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். அவர் நம் கண்ணோட்டத்துக்கு ஆளானார்; அவர் புறக் கடமைகளைச் செம்மையாக முடித்தார், அவர் அகவாழ்வு எப்படி? இவர் சொற்படி அவர்மனைவி கீழ்ப் படிந்ததாகத் தெரியவில்லை. அவர்கள் நேரில் பேசுவது இல்லை; தொலைபேசி அவர்களுக்குத் தேவைப் பட்டது. மற்றவர்களிடம் சொல்லித் தம் கருத்துகளைப் பரிமாறிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/51&oldid=806894" இலிருந்து மீள்விக்கப்பட்டது