பக்கம்:பரிசு மழை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 டாக்டர் ரா. சீனிவாசன் கொண்டனர். அவர் வாழ்க்கை அங்குத் தாமரை இலைமேல் நீர்த்துளியாகத்தான் இருந்தது. மடம் ஒன்று; அது ஒரு மகனைச் சடங்கின்படி சுவீகாரம் செய்து கொண்டது. பூமி சாத்திரம் அவர் படிக்க வில்லை; சாமி சாத்திரங்களைக் கரைத்துக் குடித்து அதையே சில சமயம் ஏன் பல சமயம் பிரச்சாரம் செய்வார். பற்று அறுதல்' என்பதைப் பற்றிப் பேசிப் பிறரை அறுப்பதே அவர் தொழிலாக இருந்தது. உள்ளுக்குள் ஓர் ஆசை அர்த்தநாரீசுவரர் ஆகவேண்டும் என்ற ஆவல். அவர் வாழ்வில் அது கைகூடவில்லை; விபூதியும் குங்குமமும் அவரைத் தடுத்து நிறுத்தின; வாழ்க்கையின் மறுபக்கம் அவர் புரட்டிப் பார்த்ததே இல்லை. அவர் வாழ்வு நிறைவு பெறவில்லை என்ற ஏக்கம் அவர் சிரிக்காத சிந்தனைகளில் வெளிப்பட்டது உழைத்து அதற்குச் சரியான ஊதியம் கிடைக்காததால் அலுத்துக் குடியைத் தேடும் குடிமகன் அவன் குடிசையில் வாழ்பவன்; அவன் பக்திப் பரவசம் அடைவது அந்த மதுபானத்தில்தான். அவன் பிள்ளைகள் எதிர்காலத்துக்குத் தம்மை ஆளாக்கிக் கொள்வதற்குச் சிறுதிருடு என்பதைக் கைத் தொழிலாகக் கொள்கிறார்கள். அவர்கள் எந்த நன்மை மீதும் பற்றும் பாசமும் கொண்டவர்களாக விளங்கவில்லை. நீதிகள் அவர்களுக்குச் சுமைகளாகப்பட்டன. தாய் மீது பாசம்' என்பது அவர்கள் காட்டவில்லை. அவளுக்குக் கொள்ளி போடும்போது மட்டும் அதை வெளிப்படுத்தினர் பிற்காலத்தில். செல்வம் கொழித்தது; பன்னிர் செல்வம் அவர் பெயர்; அவர் குளிப்பது தண்ணிர்தான். பனிநீரால் அவர் குளிக்க முடியும் என்பது அந்தப் பெயர் அறிவித்தது; அந்த வீட்டில் ஒவ்வொருவரின் பிறந்த நாளும் டைரிகளில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/52&oldid=806895" இலிருந்து மீள்விக்கப்பட்டது