பக்கம்:பரிசு மழை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 51 பதிவாயின. பாசத்துக்குப் பிள்ளைகள் போதாது என்பதால் நாய்களும் அங்குக் கட்டி வைக்கப்பட்டன. வாழ்வு தாமரை இலைமேல் உள்ள நீர் அல்ல; நீர்மேல் தாமரை, நீரின் அளவு அது உயர்ந்து இருந்தது; பற்று அற்ற நிலை என்பது அங்குச் சற்றும் தலை காட்ட வில்லை. "இந்தத் தத்துவம் வறுமை நாட்டின் பெருமை; அதனினின்று தப்பித்துக் கொள்ள கண்ட மருந்து; தப்பித்துக் கொள்ளும் தத்துவம்” என்று அறிஞர் சிலர் கூறுகின்றனர். "வேர்கள் தேவை; அவை இல்லை என்றால் மரம் தழைக்காது; பாசபந்தங்கள் அவசியம்" என்கின்றனர். எது உண்மை? எது நன்மை : சிந்தித்துப் பதில் தரத்தக்கது 17. எழுத்து ஒரு விமரிசனம் கவியரசு ஒருவரின் கவிதைகள் அதைப்பற்றிப் பட்டி மன்றம் விவாதம் நடத்தியது. பழைய திரைப்படப் பாடல்கள் கருத்துகள் நிரம்பியவை இன்று அவை வெறும் ஓசைகள் என்று பேசப்பட்டன. "இன்றைய திரைப்படங்களில் கருத்தே இல்லை; கருத்து ஒரு சுமை; அதை விடுவதால்தான் படங்களுக்கு வெற்றி” என்று ஒரு சிலர் எடுத்துக் காட்டினர். "திரைப்படம் என்பது ஒசைகளும் அசைவுகளுமே; அதற்குமேல் சென்றால் அவை தோல்வி பெறுகின்றன." என்பது ஒரு சிலர் தெரிவித்த வாதமாகவும் இருந்தது. ஒரு எழுத்தாளர் அந்தப் பட்டிமன்றப் பேச்சில் கல்ந்து கொண்டார்; தான் இரண்டாயிரம் கதைகள் எழுதி இருப்பதாகவும், அப்படி எழுதியும் வாழ்க்கையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/53&oldid=806896" இலிருந்து மீள்விக்கப்பட்டது