பக்கம்:பரிசு மழை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை காவியங்களைப் பழைய காலத்தில் எழுதினர்; ஒரு தலைவனை வைத்துப் பல கிளைக் கதைகளை உடன் சேர்த்தனர்; அதையும் சிறுகதைத் தொகுப்பு என்று கூறலாம். இன்று காவியங்களை எழுத முடியவில்லையே என்று பலர் சுட்டிக் காட்டி உள்ளனர். அவற்றின் இடத்தைச் சிறுகதைத் தொகுப்புகள் பெற்றுள்ளன. அவை இன்று வாசகர்களை ஈர்க்கின்றன. வாசகர்கள் தம் சுவைக்கு ஏற்ப ஆசிரியர்களைத் தேடுகின்றனர். வாசிக்கும் ஆர்வம் மிக்கு உள்ளது. என்னால் சிறுகதைகளை எழுத முடிந்தது; எழுதினேன்; பரிசு மழை என்ற தலைப்பில் வெளியிடுகிறேன். இன்று சமுதாயம் பல மாற்றங்களைப் பெற்று வருகிறது; பல பிரச்சனைகளைச் சந்திக்கின்றது. கருத்தோட்டம் மாறி வருகிறது. அவற்றைச் சுட்டிக் காட்டினால்தான் இலக்கியம் உயிர்த்துடிப்போடு இயங்கும். மற்றவர்கள் காண்பதுதான் இது. அவர்கள் பேசிக் கொள்பவை இவை. ஒரு பத்திரிகை நிருபர் செய்யும் வேலையை என் எழுத்துச் செய்து இருக்கிறது. அவர்கள் பேசும் உரையாடல் களை இங்குப் பதித்து உள்ளேன். பத்திரிகை நிருபர்கள் நேரில் சென்று சந்தித்து எழுதுகிறார்கள். இவை சந்திக்காமலேயே எழுதியவை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/5&oldid=806892" இலிருந்து மீள்விக்கப்பட்டது