பக்கம்:பரிசு மழை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 எதுவும் கற்பனையில் இருந்து எழுதப்பட்டது அன்று. கற்பனை துணை செய்து இருக்கிறது. இவை அன்றாட நிகழ்ச்சிகள். நாம் சந்திக்கும் மாந்தர்கள். இன்று மாந்தர்களின் எண்ணப் போக்குகளில் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. அவை புதுமை என்று குறிப்பிடப்படுகின்றன. அதனால் என் எழுத்துப் புதுமை பெறுகிறது. பாரதி எதிலும் புதுமை காண வேண்டும் என்பார். சொற்புதிது, சுவை புதிது வேண்டும் என்பார். செய்திகளும் புதுமை உடையன. எழுதுவதில் ஒரு தனித்துவம் உள்ளது. அது ஆசிரியனின் தனி முத்திரை. அது எழுத்தின் இயக்கத்திற்குத் துணை நிற்கின்றது. ஏன்? அதுதான் எழுத்தே என்றும் கூறலாம். எதை எழுதுகிறான் என்பதோடு எப்படி எழுதுகிறான் என்பதும் எதிர்பார்க்கப்படுபவது. 'பரிசு மழை என்ற தலைப்பு அறிமுகம் ஆகிய தலைப்பு. இன்று எதற்கு எடுத்தாலும் பரிசு என்று கூறி விளம்பர உச்சரிப்போடு இந்த நச்சரிப்பும் சேர்ந்து இருக்கிறது. அந்த அலை வீச்சு எவ்வளவு தரக்குறைவு என்பதைச் சுட்டிக்காட்டக் கதைகள் சிலவற்றில் இந்த உத்தி பயன்படுத்தப்பட்டு உள்ளது. அதுவே முதல் கதையின் தலைப்பாகத் தரப்பட்டுள்ளது. இத்தொகுப்புக்கு வாசகர்களின் வரவேற்பு இதற்குத் தரும் பரிசு மழையாகும். ரா. சீனிவாசன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/6&oldid=806903" இலிருந்து மீள்விக்கப்பட்டது