பக்கம்:பரிசு மழை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 5 1. பரிசு மழை அவள் சிரிப்பு அதற்கு ஒரு தனிக் கவர்ச்சி இருந்தது. அது அவள் முகத்துக்கு முன்னுரை எழுதியது போல் இருந்தது. அது அவள் அடக்கத்தில் இருந்தது. கலகலப்பு அல்ல அது முகை அலர்வது போன்ற நகை, அந்தப் புன்முறுவலுக்குப் புறங் காட்டாதவர் யாரும் இருக்க முடியாது; இந்த உலகத்தையே அதைக் கொண்டு அவள் விலை பேச முடியும் என்ற நினைவு தோன்றும். அவள் நகைப்பு அவள் வனப்பைக் கூட்டித் தந்தது. அதுவே அவளுக்கு மூலதனமாகவும் அமைந்தது. சிரிப்புக்கு இப்பொழுது புதிய சந்தை கிடைக்கிறது. புதுப்புதுத் தொலைக்காட்சிகள் நாளொரு வடிவும் பொழுதொரு வண்ணமும் ஆகத் தோன்றிக் கொண்டிருக்கின்றன. அங்கே அவளுக்கு வேலை வாய்ப்புக் கிடைத்தது. நிகழ்ச்சிகளை நிரல்படுத்த அவள் விரல் அசைவுகள் பயன்பட்டன. நடிப்புத் திறமை அவளிடம் படியாத காரணத்தால் அவள் அந்தத் தொழிலைவிட்டுத் தாவ முடியாமல் சர்க்கஸ் மானேஜராகவே பணி செய்தாள். மற்றவர்களைக் கேள்விகள் கேட்டு விசாரணையில் அவள் நிறுத்தினாள்; பிறக்காத குழந்தைகளும் கேள்விகள் கேட்டு அவளைப் பேச வைத்தனர். அவள் இந்த நிகழ்ச்சிகளில் 'சவுக்கடி சந்திரகாந்தா'வாகச் செயல்பட்டாள். விளம்பரக்காரர்கள் அவள் சிரிப்புக்கு விலை கொடுத்தனர். சோப்புப் பெட்டி முதல் சோடா புட்டி வரை அவள் உபயோகப்படுத்தியதாக விளம்பரம் செய்யப் பட்டது. விற்பனைப் பொருளோடு அவளும் வியாபாரப் பொருள் ஆயினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/7&oldid=806914" இலிருந்து மீள்விக்கப்பட்டது