பக்கம்:பரிசு மழை.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 டாக்டர் ரா. சீனிவாசன் அவள் சிரிப்புக்காகவே அவன் அவளிடம் காதல் வலை வீசினான்; அவள் அவன் ஈர்ப்புக்கு வார்ப்பாக ஆயினாள்; இருவரும் இணைவதற்கு அந்தச் சிரிப்பு அழகே காரணமாக இருந்தது. ரசனை மங்க ஆரம்பித்தது; எந்த அழகும் பழகிவிட்டால் மந்தமாகி விடுகிறது என்பது அவன் கண்ட அநுபவமாக இருந்தது. மேலும் அவள் தொழிலே சிரிப்பாக இருந்ததால் அது நடிப்பாக அவளுக்குப்பட்டது. அதில் அவளுக்கு ஒரு அலுப்பு ஏற்பட்டது போல் தோன்றியது. சிரிப்பதற்குப் புதுமைகள் தேவைப்பட்டன. அழகுகூட நிரந்தரமானது அல்ல; அதற்குமேல் ஒன்று அங்கே குறைவாக இருந்தது. வீட்டில் அவள் மவுனம் கடைப்பிடித்தாள்; அது அவளுக்குத் தேவைப்பட்டது. அவளிடம் எதிர்பார்த்த ஒன்று மறையத் தொடங்கியவுடன் அவன் காதல் உறவு தேய்பிறை ஆகியது; சில்லறைச் செய்திகள் சச்சரவுகளை ஏற்படுத்திக் கொடுத்தன. வேறு வழியில்லை; அவளுக்குத் தனிமை தேவைப் பட்டது. அறிவுள்ள எந்தப் பெண்ணும் நீடித்து ஒருவனிடம் தொடரமுடியும் என்ற நம்பிக்கை அவளிடம் குறைந்து விட்டது. வாழ்க்கையை அந்தச் சிறிய வரை கோட்டுக்குள் அகப்படுத்திக் கொள்ள அவள் விரும்பவில்லை. "ஏன் அவன் உறவு?" என்ற நினைவும் எழுந்தது; அதைவிடவும் அவளால் முடியவில்லை. "ஏன் ஒன்றாக இணைய முடியவில்லை ?' என்ற சிந்தனைகள் தொடர்ந்தன. அவள் சிநேகிதிகள் அடிக்கடி வந்து சென்றனர். ஆடவர் இல்லாத வீடு என்பதால் அதிக நேரம் அங்கே செலவிட்டனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/8&oldid=806925" இலிருந்து மீள்விக்கப்பட்டது