பக்கம்:பரிசு மழை.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 55 19. தேர்வு இது தொழில் தேர்வு அல்ல; எழில் தேர்வு; நாணிக் கண் புதைக்கும் கோணலை நிமிர்த்தி நேர்முகம் காணல் இது. காரமும் இனிப்பும் எதேச்சாதிகாரமாக வைக்கப் பட்டன; அவர்கள் அவற்றை ஆக்கிரமித்தனர். வீட்டுத் தலைவன் முன்மொழிந்தார்; தரகர் வழி மொழிந்தார்; பேச்சுத் தொடங்கியது. "பாட்டு வருமா?" என்று கேள்வி எழுப்பவில்லை. காலம் மாறிவிட்டது; ரசனைகள் மாறிவிட்டன. அதை அங்குவந்துதான் கேட்க வேண்டும் என்ற நிலை இல்லை. "ஆட வருமா?" என்று கேட்கத் தேவை இல்லை. ஏன் என்றால் கொஞ்சம் ஆடத் தெரிந்தாலே கால்வீட்டுத்தேடி அவர்கள் கால்கள் சென்றுவிடுகின்றன. அவர்கள் திருமணம் கேள்விக் குறிகள் ஆகி விடுகின்றன. அவள் உயரத்தைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்கள்; நிறத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டார்கள்; அகலத்தை மட்டும் அவர்கள் ஆராய முற்படவில்லை. கல்வி ஆழத்தை ஆராயத் தொடங்கினர். கேட்பதற்கு முன் அவள் தான் ஒரு கம்ப்யூட்டர் என்பதைத் தெரிவித்து விட்டாள். ஒப்புக் கொள்ளப்பட்டது. வடகடலில் இருந்த முளை ஒன்று தென்துருவத்தில் இருந்த வடத்தோடு சேர்ந்தது என்பர். இது கலியானத்தைப் பற்றிய பழங்காலத்துக் கவிதையின் சித்திரம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/57&oldid=806900" இலிருந்து மீள்விக்கப்பட்டது