பக்கம்:பரிசு மழை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 டாக்டர் ரா. சீனிவாசன் இடிபாடுகள் இறங்கும்போது காணப்படவில்லை. மற்றவர் களுக்கு வழிவிட்டு அவரவர் இறங்கிச் சென்றனர். நாகரிகச் செயலாகப்பட்டது. பார்வையாளரை மற்றவர் விசாரித்தார். "நீலத்திரைக் கடலில் நீ என்ன கண்டிட்டாய்?" என்றார். "ஓலமிட்ட ரயில் அசைவில் ஒரே முகத்தைத் திரும்பத் திரும்பப் பார்த்துக் கொண்டிருந்தேன்" என்று தெரிவித்தார். "கம்பர் ஒரு கருத்துக் கூறுகிறார் அதைப்பற்றி நீ என்ன கூறுகிறாய்?" என்று பேச்சைத் திசை திருப்பினார். "மஞ்சரார்க்கும், மாதரார்க்கும் மனம் என்பது ஒன்று தான் என்கிறார் கம்பர். அதைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?" என்று தொடர்ந்தார். - "மஞ்சர் என்றால் என்ன? அதற்கு விடை கூறு முதலில்” என்றார் மற்றவர். "அதாவது மைந்தர்க்கும், மங்கையர்க்கும் மனம் என்பது ஒன்றுதான் என்று கூறுகிறார். அதைப்பற்றி நீ என்ன கருதுகிறாய்? "உண்மைதான்; மனம் என்பது ஒன்றுதான்" என்றார் மற்றவர். “ரசனை ?” "கொஞ்சம் மாறுபடும்” என்றார். "என்னை மன்னித்து விடு” என்றார். "ஏன் ? என்ன செய்தாய்?" "அவள் சிரிக்கும் போதெல்லாம் கன்னத்தில் குழிகள் ஏற்பட்டன, அவற்றிற்காகக் காத்து நின்றேன்" என்றார். "அடப்பாவி இது உனக்குத் தகாது" என்றார் மற்றவர். இருவரும் ஐம்பதைக் கடந்தவர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/56&oldid=806899" இலிருந்து மீள்விக்கப்பட்டது