பக்கம்:பரிசு மழை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 53 மத்தியதர வயது எட்டிப் பிடிக்காத முப்பதுகள் சிலர் அச்சுச் சிறுமையையும் பக்கப் பெருமையையும் கொண்ட ஆங்கிலக் கதைகளைத் துப்பறிந்து கொண்டிருந்தனர். கொலை அதைப் பற்றிய துப்பு: அதற்குப் பக்கம் ஐந்நூறு. இது அவர்களை அழுத்தி வைத்தது. அக்கம் பக்கம் அசையாமல் படித்தனர். பத்திரிகைகள் கைமாறின. சுய மரியாதைக் கட்சிக்காரர்கள் சிலர் பிச்சை எடுப்பது இழிவு என்பதைக் காட்டும் வகையில் அங்குச் சிதறிக் கிடந்த குப்பைகளை அகற்றித் தரையைச் சீர் செய்தனர். அவர்கள் ஊனமுற்ற மானஸ்தர்கள் என்பது அவர்கள் ஊர்ந்து சென்ற இயக்கங்கள் காட்டின. அவர்கள் உழைத்துச் சம்பாதித்தார்கள். இந்தப் பல்சுவைப்பகுதிகளில் மனம் தராமல் இருவரில் ஒருவர் பார்வை மட்டும் காதல் சுவையில் ஈடு பட்டது; அதாவது காதல் காட்சியில் ஈடுபட்டது; அதாவது காதல் இருவர் கருத்து ஒருமித்துக் கருத்துகள் பேசிக் கொண்டிருந்த உரையாடலில் ஈடுபட்டார். அந்த இளைஞர்கள் புதிய தம்பதிகள் எனத் தெரிந்தது. பிறரோடு ஆங்கிலத்தில் தொடர்பு கொண்டனர். அவர்கள் இருவரும் தம் தாய்மொழியில் உறவு கொண்டனர். இவர் அவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டு இருந்தார். சுட்டுப் போட்டாலும் அதில் எட்டுச் சொற்களுக்குக் கூட பொருள் தெரியாது. பின் அவர் என்னதான் ரசிக்கிறார்? மற்றவருக்கு வியப்பாக இருந்தது. ஏறக்குறைய மூன்று மணி நேரம் இந்தத் திரைப்படம் ஓடியது; ஒடும் ரயில் ஒய்வு கொள்ள செண்ட்ரல் நிலையம் வந்து சேர்ந்தது. உடனே எங்கும் பரபரப்பு; திரைக் கொட்டகை விட்டு வெளியேறும் கூட்டத்தினர் ஆயினர். ஏறும்போது காட்டும் முரட்டுத்தனம்; நெரிசல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/55&oldid=806898" இலிருந்து மீள்விக்கப்பட்டது