பக்கம்:பரிசு மழை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 57 இன்று மதிப்பீடு மாறிவருகிறது; இது கம்ப்யூட்டர் யுகம் பெண் இன்று பணம் சம்பாதிக்கும் கம்ப்யூட்டர் ஆகிவருகிறாள் என்பதை அவள் அறிந்து கொண்டாள். 20. பேட்டி திரைப்படத்தில் அவள் காலடி வைத்தாள்: அவ்வளவு தான்; வீட்டு அழைப்பு மணி அலரத் தொடங்கியது. “штrr 2” "ரிப்போர்ட்டர்" 'நாங்கள் எந்தப் போர்ட்டரையும் அழைக்க வில்லையே” "நீங்கள் நகைச்சுவையாகப் பேசுகிறீர்" என்று கூறி அவளை மகிழ வைத்தான். குற்றவாளிக் கூண்டில் அவள் நிறுத்தப்பட்டாள்; விசாரணை தொடங்கியது. 'நீங்கள் விரும்பி இந்தத் துறைக்கு வந்தீரா; மற்றவர்கள் விரும்பி உங்களை அழைத்தார்களா?” தன்னை அறிமுகப்படுத்திய 'பாரதிராஜாவை அவள் பெயரிட்டுக் கூறவில்லை. "இதற்கு அழைப்புத் தேவை இல்லை, வாய்ப்பு: அது சிலருக்குக் கிடைக்கின்றது; பலருக்குக் கிடைப்பது இல்லை" என்றாள். 'இந்தத் துறைக்கு வந்ததற்காக எப்பொழுதாவது வருத்தப்பட்டது உண்டா? 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/59&oldid=806902" இலிருந்து மீள்விக்கப்பட்டது