பக்கம்:பரிசு மழை.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 ல் டாக்டர் ரா. சீனிவாசன் "நீர் பேட்டி கேட்கத் தகுதி இல்லை என்பதைக் காட்டிவிட்டீர்; உங்களை இந்தத் தொழிலுக்கு அனுப்பினார்களே அவர்களை நினைத்து வருத்தப் படுகிறேன்” என்றாள். "நீங்கள் உண்மையில் அறிவாளி; எதிரியை நன்கு மடக்கி விடுகிறீர்" என்று அவளைக் குளிர வைத்தான். "ரசிகர் மன்றங்கள் வைத்தால் அவர்களுக்கு உம் ஆதரவு கிடைக்குமா?" "எங்களுக்கு அவர்கள் பட்ம் வைக்கிறார்கள் அதுதான் பார்த்திருக்கிறோம்; மன்றங்கள் வைத்துப் பார்ததது இல்லை; அவை நடிகர்களுக்குதான், நடிகை களுக்கு அல்ல” என்று சுட்டிக்காட்டினாள். இது புதுமையாக இருந்தது. "நடிகர்கள் அரசியலில் இறங்குவதுபற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" - "இது புளித்துவிட்ட பழைய கேள்வி, இதைக் கேட்டு நாங்கள் அலுத்து விட்டோம்” என்றாள். "உங்களுக்குத் திருமணம் செய்து கொள்வது பற்றி ஏதாவது திட்டம் வைத்திருக்கிறீர்களா?” "ஐந்தாண்டுத் திட்டம் உள்ளது” அதற்குள் அவன் அவசரப்பட்டுப் பேசினான். . "இந்த ஐந்தாண்டுகளில் எத்தனை விவாகரத்து களுக்கு இடம் தரப் போகிறீர்கள்; இந்தச் சாதனையின் எண்ணிக்கை எதுவாக இருக்கும்” என்று கேட்டு விட்டான். "ஐந்தாண்டு என்பது என் நடிப்பைப் பற்றியது; அதற்குள் அவசரப்பட்டு விட்டீர். திருமணம் பத்தாண்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/60&oldid=806904" இலிருந்து மீள்விக்கப்பட்டது