பக்கம்:பரிசு மழை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 59 திட்டம்; அதற்குள்ளும் நிறைவேறுமா என்று உறுதியாகக் கூறமுடியாது” "எப்படிச் சொல்கிறீர்கள்?" "அதற்கு மேலும் படங்கள் கிடைத்தால் திருமணம் தள்ளிப் போட வேண்டி வரும்" 'நீங்கள் நடிப்புக்கு முதலிடம் தருவீர்களா; திருமணத்துக்கு முதலிடம் தருவீர்களா?” “எனக்கு இந்தத்துறை கொடுக்கும் இடத்தைப் பொறுத்தது; தேவைப்படும் போது அப்பொழுது ஒரு மடையன் கிடைக்காமல் போகமாட்டான்” என்றாள். 'அவன் உங்களை எது கருதி மணம் செய்து கொள்வான் என்று கருதுகிறீர்கள்." "காதலித்துக் கலியாணம் செய்து கொள்வான்” “உங்களையா?” "இல்லை; நான் சேர்த்து வைத்திருக்கும் பணத்தை, வீட்டை மற்றும் உள்ள வசதியான வாழ்க்கையை” "அதில் உங்களுக்கு மனநிறைவு ஏற்படுமா?" "அவனுக்கு மனநிறைவு நிச்சயமாக ஏற்படும்; அதுபோதும்" என்று முடித்தாள். 21. நேரம் பொன்னானது எதுகை மோனைகளை அடுக்கிச் செங்கல் கட்டிடம் கட்டினார்; அவற்றோடு இசைக்காரர்கள் சப்த ஜாலங்களைப் போட்டவுடன் அவர் திரைப்படக் கவிஞர் ஆகிவிட்டார்; மானுடம் பாடுவதை விடுத்து மயக்கம் தரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/61&oldid=806905" இலிருந்து மீள்விக்கப்பட்டது