பக்கம்:பரிசு மழை.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 டாக்டர் ரா. சீனிவாசன் ஒசைகளை உண்டாக்கினார்; இந்த மக்கள் அந்தக் கிறக்கத்தில் அவரைக் கவிஞர் என்று உயர்த்திவிட்டனர். அவர் விருதுகள் பெற்ற வித்தகரும் ஆயினார். இந்த ரசிகர்கள் அவரைப் பார்த்துப் பேச ஆவல் கொள்கின்றனர்; வீட்டுமுன் காவல் பலமுள்ளதாக உள்ளது; நாய்க்குப் பதிலாகத் தடுப்பதற்கு ஒரு பிரிய அணுக்கர் (PA) செயல்பட்டார். அவர் அனுமதி பெற்றே கவிஞரை அணுகிவந்தனர். கேட்டால் "நேரம் பொன்னானது" என்று அவர் கூறுகிறார்; நேரத்தை அவர் பொன்னாக்கினார். காட்சிக்கு அரியர் என்ற மாட்சியைப் பெறுகிறார். அவரைப் பார்க்கவே முடியாது என்கின்றனர். மற்றொரு பேராசிரியர்; அலங்காரப் பேச்சாளர். அவர் சொற்பொழிவுகளுக்கு அழைக்கப்பட்டார். டி.விக்கள் பெருகுவதற்கு முன் அவர் கொடுத்ததை வழிப் பயணச் செலவுக்கு என்று பெற்றுத் தமிழ்த் தொண்டு செய்து வந்தார். இப்பொழுது அவர் ரேட்டு அதிகமாகி விட்டது. வீட்டு முகப்பு அறையில் "நேரம் பொன்னாது; 'ஐந்து நிமிஷம்" என்று எழுதிவைத்துள்ளார். வக்கீல் ஒருவர் அவரிடம் பேசினால் பக்கத்தில் மீட்டர் வைத்திருக்கிறார்; நிமிஷத்துக்கு இவ்வளவு என்று அது தொலைபேசிப் பொறிபோல் கணக்குக் காட்டுகிறது; அவர் நீதி மன்றத்தில் நின்றால் பத்தாயிரம்; பேசினால் லட்சங்கள்; உட்கார்ந்தால் அதற்கும் காசு, காசேதான் தொழிலடா என்பது அவர் சித்தாந்தமாக இருக்கிறது. மருத்துவரிடம் சென்றால் தொட்டால் தொள் ளாயிரம்; வெட்டினால் தொண்ணுறாயிரம்; அவர் பொன்விழா கொண்டாடுவது இல்லை. வைரவிழாவே நடத்துகிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/62&oldid=806906" இலிருந்து மீள்விக்கப்பட்டது