பக்கம்:பரிசு மழை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 61 அரசியல் வாதி; அவர் தேர்தலுக்கு முன் தெருவோரம் கூட்டங்கள் நடத்தினார்; இன்று கடலோரம் காட்சி தருகிறார்; அவரைப்பார்ப்பது எளியது அல்ல என்று பேசுகிறார்கள்; அதைப்பற்றி எழுதத் தேவைஇல்லை; பத்திரிகைகள் விமரிசிக்கின்றன. சோழியன் குடுமி சும்மா ஆடுவது இல்லை என்று சொல்கிறார்கள். இவர்கள் அனைவரையும் பார்த்து விட்டு இந்தப் புத்தக உற்பத்தியாளர் ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவர் நேரம் பொன்போன்றது என்று பலகை போட்டு மாட்டி இருந்தார். சமுதாயப் பிரச்சனைகளை அவர் எழுதிவந்ததால் அவர் சமூகப் பிரச்ஞையோடு செயல்படுவார் என்று எதிர்பார்த்து இவர் சென்றார். "உங்களிடம் பேசும் நேரத்தில் ஒரு பக்கம் எழுதி இருப்பேன், தயவு செய்து முடித்துக் கொள்ளுங்கள்" என்று கூறி அனுப்பிவிட்டார். அவரும் தன் எழுத்தைப் பொன் ஆக்கிக் கொண் டிருந்தார். தலையெழுத்து என்று சென்றவர் திரும்பி வந்தார். யார்தான் நேரத்தைக் காசாக்காமல், இருக்கிறார்கள் என்று தேடிப் பார்த்தார். டி.வி. முன் அதைத் திருப்பிக் கொண்டு உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்து ஒரு காரியம் ஆக வேண்டி இருந்தது. "கொஞ்சம் வருகிறீர்களா?" என்று கேட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/63&oldid=806907" இலிருந்து மீள்விக்கப்பட்டது