பக்கம்:பரிசு மழை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

C2 ( Lirët i pr. đefanger "நேரம் பொன்னானது. டி.வி. பார்த்துக் கொண்டு இருக்கிறோம் எங்களைத் தொந்தரவு பண்ணாதீர்” என்று பேசி அனுப்பி விட்டார். முதல் இரவு இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். "நேரம் பொன்னானது; பேசிக் கொண்டே இருந்தால் எப்படி?" என்ற வினாவும் அங்கும் எழுப்பப்பட்டது. 22. செய் நன்றி அவர் ஒரு சட்ட நிபுணர்; நல்லவர்கள் பக்கம் அவர் நின்று வாதாடுவது இல்லை. கேட்டால் "நன்மைக்கு வக்காலத்து வாங்க வேண்டியது இல்லை" என்று கூறினார். - ஒருவன் கொலை செய்துவிட்டுப் போலிசில் சரண் அடைவதற்குப் பதில் இவரிடம் வந்து அரண் புகுந்தான். “எத்தனை கொலை செய்தாய்?" என்றார். "ஒரே ஒரு கொலை" "இவ்வளவுதான் செய்ய முடிந்ததா? அதற்கு வேறு வக்கீலைப்பாரு, ஐந்து கொலைக்குக் குறைவாகச் செய்தால் நான் வாதாடுவது இல்லை" என்றார். இப்படித் தீயவர்களுக்கே அவர் வக்கீலாகச் செயல் பட்டார். "நீங்கள் தீமைக்கு உடந்தையாக இருக்கலாமா?" "வைத்தியன் சுகாதாரமான ஆளுக்கு உதவுவது இல்லை; அவன் நோயாளிக்குத்தான் துணைவன்; பால்நோய் வாங்கி வருபவனை அவர்கள் "ஏன் தவறு செய்தாய்?" என்று கேட்பது இல்லை. மருத்துவம் அவர் தொழில், திருத்துவது பள்ளி ஆசிரியர் தொழில்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/64&oldid=806908" இலிருந்து மீள்விக்கப்பட்டது