பக்கம்:பரிசு மழை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 63 தம் உயிரைக் காத்துக் கொள்ள அவர்கள் கொள்ளை அடித்து இவரிடம் வந்து கொட்டினார்கள், ஒரு கொலை செய்தவன் ஐந்து செய்தான் இவர் தனக்கு வாதாட வேண்டும் என்பதற்காக பணவசதி இருந்தது; அவர் பிள்ளைகள் படித்தார்கள்; வெளிநாடுகளில் சென்று குடியேறி விட்டார்கள். மறைந்ததும் மாட்டி வைத்தபடம் அவர் இருந்த அடையாளத்தைக் காட்டிக் கொண்டு இருந்தது. அவர் துணைவியார் அந்தப் பெரிய வீட்டில் தனியாக இருந்தார். வேலைக்காரர்கள் அவரவர் தம் வேலை செய்து விட்டுத் தத்தம் வீடு திரும்பினர். அவர் மட்டும் அந்த வீட்டில் தனித்து இருந்தார். 'வீடு புகுந்து திருடுவது என்பது இப்பொழுதைய கனரகத் தொழிலாகி விட்டது என்று பேசப்படுகிறது. பலரும் மேற்கொள்ளும் போது அது ஒரு ஒப்புக் கொள்ளப்பட்ட தொழிலாகிவிடுகிறது. 'உங்களுக்கு அச்சமாக இல்லையா தனித்து இருக்கிறீர்களே என்று கேட்கப்பட்டது. "கொலையாளிகள்தாம் எனக்குக் காவளாளிகள்; என் கணவரின் கிளைண்டுகள்; அவர்கள் எனக்குப் பாதுகாப்பு. அவர்கள் என்னைக் கவனித்துக் கொள்கிறார்கள். அவர்கள் நன்றியுடையவர்கள்; எங்களை அவர்கள் காப்பாற்று கிறார்கள். எங்கள் வீட்டில் பிறர் புகுந்தாலும் அவர் தடுத்து விடுவார்கள்” என்றார் அந்த அம்மையார். "உங்கள் பிள்ளைகள் ?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/65&oldid=806909" இலிருந்து மீள்விக்கப்பட்டது