பக்கம்:பரிசு மழை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 டாக்டர் ரா. சீனிவாசன் "அவர்கள் பிழைப்பைத் தேடி வெளிநாடு சென்று விட்டனர்.” "அவர்களுடன் நீங்கள் சென்று இருக்கலாமே" “தேவை இல்லை; நாயும் எனக்குக் காவல் இருக்கிறது" என்றார் அவர். 23. எது சரி? பட்டுப் புடவை; துட்டுக் கொடுத்து வாங்கிய நகைகள், மணக்கோலத்தைக் காண இவர்களும் மணக் கோலத்தில் செல்கின்றனர். அவர்கள் உடுத்திய புடவை சலசலப்பை உண்டாக்கியது. தாலி கட்டியாகிவிட்டது; அதற்குப் பின் அங்கு ஒருவர் கூட இல்லை. அனைவரும் உண்டி குலுக்கச் சென்று விட்டனர். திண்டி முடிந்ததும் வண்டி தேடினர் வீடு திரும்ப. தானியங்கி வண்டிகள் அங்கே வெளியே இயங்காமல் நின்று கொண்டிருந்தன. போலீசு கூட தகராறு வைத்துக் கொண்டு ஊடல் செய்தார்கள் இந்த ஆட்டோக்காரர்கள். மின்னல் வேகத்தில் ஒடும் வண்டிகள் பக்கம் வாங்கிக் கொண்டு ஒதுங்கி விட்டன. அந்தப் பக்க நோய்க்காரர்களை இவர் கூப்பிடச் சென்றார். "இப்பொழுது வராது" என்று ஒருமித்த குரலில் மறுப்புத் தெரிவித்தனர். "எப்பொழுது வரும்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/66&oldid=806910" இலிருந்து மீள்விக்கப்பட்டது