பக்கம்:பரிசு மழை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிசு மழை 65 "எங்களிடம் மன்னிப்புக் கேட்கும் வரை வண்டியை எடுக்க மாட்டோம்" என்றனர். "நாங்கள் ஒரு தவறும் செய்யவில்லையே" "இது எங்களுக்குள் ஏற்படும் தகராறு, கொடுக்கல் வாங்கல்; நீங்கள் தெரிந்து கொள்ளத் தேவை இல்லை" என்றனர். "இன்று எதிர்த்துக் கொள்வோம், நாளைக்குக் கூடிக் கொள்வோம்" என்றனர். ஏதோ சமாதானப் பேச்சு நடந்திருக்கிறது. உடனே வேலை நிறுத்தம் புயல் தோன்றி அடங்கிய வேகத்தில் வாப்பஸ் வாங்கப்பட்டது. "அமிஞ்சிகரைக்கு வரமுடியுமா?" 'முடியாது; அடையாறுதான் போகும்; வரமுடியுமா?" “வேறு வழியில்லை; அடையாறுக்குப் போய் அங்கிருந்து பஸ் பிடித்து அமிஞ்சிகரைக்குப் போய்விடலாம்” என்று தன் உடன் வந்த வீட்டுக்கார அம்மையாரிடம் கேட்கிறார்; அவருடைய மனைவிதான். சில சமயம் இந்த உறவு வீட்டை வைத்துச் சொல்லப் படுவதும் உண்டு. அந்த அம்மையார் இவரை வீட்டுக்காரர் என்று குறிப்பிட்டார்; அவர் இவரை வீட்டுக்காரி என்று குறிப்பிட்டார். "என்னங்க விளையாடறிங்களா? தாச பிரகாஷ் எங்கே இருக்கிறது; அடையாறு எங்கே இருக்கிறது?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பரிசு_மழை.pdf/67&oldid=806911" இலிருந்து மீள்விக்கப்பட்டது